ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட்! களநிலவரம் என்ன?

ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுப்பிய பரிந்துரையை திமுக தலைமை ஏற்கவில்லையாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 25, 2024, 03:48 PM IST
  • ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வு
  • அமைச்சர் முத்துச்சாமி அப்செட்
  • களநிலவரம் சொல்வது என்ன?
ஈரோடு திமுக வேட்பாளர் தேர்வில் அமைச்சர் முத்துசாமி அப்செட்! களநிலவரம் என்ன? title=

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து படுஜோராக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவில், மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றல் அசோக்குமார் கடந்த ஆண்டுகளுக்கும் மேலாகவே ஈரோடு மக்களவை தொகுதியை குறி வைத்து வேலைகளை செய்து வந்தார்.  ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் எல்லாம் மலிவு விலை உணவகத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் பல்வேறு சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும் படிக்க | ஈரோடு எம்பி கணேசமூர்த்தி விஷம் அருந்த இது தான் காரணமா? அதிர்ச்சி தகவல்!

இதனால் அவருக்கு தொகுதியில் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது. மறுபுறம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரகாஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ், எ.வ.வேலு ஆகியோருக்கு மிக நெருக்கம். மதிமுகவுக்கு ஈரோடு சீட் இல்லை என்று முடிவானதும், அங்கு திமுக நேரடியாக களமிறங்குவது உறுதியானது. உடனே ஈரோடு மாவட்டத்தின் மூத்த அமைச்சர் முத்துசாமி தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்குமாறு தலைமையிடம் வலியுறுத்த, பிரகாஷூம் தனக்கு சீட் கொடுக்குமாறு அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் மூலம் காய்களை நகர்த்தியுள்ளார். இதில் அமைச்சர் முத்துசாமியின் பட்டியல் நிராகரிக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினின் அமோக ஆதரவுடன் பிரகாஷ் திமுக மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 

சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரிணிக்கு குறிப்பிட்ட சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஒரே ஒரு சீட் மட்டும் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் ஒதுக்கப்பட்டிக்கிறது. அந்த தொகுதி தான் ஈரோடு. அதனால் அந்த தொகுதியில் எப்படியாவது பிரகாஷ் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரும்புகிறார். இளைஞரணி சார்பில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் இளைஞர்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என நினைக்கிறார் உதயநிதி.

இருப்பினும் அமைச்சர் முத்துசாமிக்கு ஈரோடு மக்களவை தேர்தல் வேட்பாளர் தேர்வில் தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறாராம். பிரகாஷ் மீது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அமைச்சர் முத்துசாமி, அவரை எந்தவகையிலும் ஈரோடு திமுக விழாக்களில் முன்னிலைபடுத்தாமல் இருப்பதை கவனமாக உறுதி செய்து வந்தார். அவருக்கு நிகராக திமுகவில் யாரும் கோலோச்சக்கூடாது என்கிற அடிப்படையிலேயே காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரை மீறி இந்த முறை தலைமை பிரகாஷூக்கு ஈரோட்டில் சீட் கொடுத்திருக்கிறது. அதனால் தேர்தல் பணிகளிலும் அமைச்சர் முத்துசாமி சுறுசுறுப்புடன் செயல்படவில்லையாம். அதேபோல் எதிர்முகாமில் இருக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு இணையாக தேர்தல் பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஈரோடு திமுக இருந்தாலும் உட்கட்சி பூசல் காரணமாக சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். இதனால், திமுக வேட்பாளர் பிரகாஷ் வெற்றி வாய்ப்பு என்பது அமைச்சர் முத்துசாமியின் களப்பணி வேகமெடுப்பதில் மட்டுமே இருக்கிறது என்பதால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்துக்கும் இதை கொண்டு செல்ல உடன்பிறப்புகள் திட்டமிட்டுள்ளார்களாம்.

மேலும் படிக்க | கையில் தாமரையுடன் கோயிலில் வழிபட்ட தமிழிசை... நாளை வேட்பு மனு தாக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News