மதுரை: சில அரசியல் சூழலின் காரணமாக கூட்டணி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி நடத்துவது என தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வரும் நேரத்தில், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் யார் ஆட்சி ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும், திமுக (DMK), அதிமுக (AIADMK) தலைமையில் தற்போது இருக்கும் கூட்டணி தொடருமா? இல்லை கூட்டணிகள் மாறுமா? மூன்றாவது அணி அமையுமா? என குழப்பமான சூழல்  தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. 


அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுகவும் (AIADMK), தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை இழந்த திமுக (DMK), இந்த முறை கண்டிப்பாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என வியூகங்கள் வகுத்து வருகின்றது. அதேபோல மற்ற கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது, யாருடன் கூட்டணி சேர்வது என ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


ALSO READ |  விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படம்!


தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் இதுவரை எந்தவித குழப்பமும் இல்லாமல், சீராக செல்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறலாம். அதிமுகவில் பாமக (PMK) மற்றும் தேமுதிக கூட்டணி மாறலாம் அல்லது மூன்றாவது கூட்டணி உருவாகலாம் எனத் தகவல். மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamalhaasan) தனித்து நிற்பாரா? அல்லது கூட்டணி அமைப்பாரா? எனத் தெளிவாக இன்னும் தெரியவில்லை. அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) , 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது கட்சி போட்டியிடும் எனக் கூறியிருந்தார். ஒருவேளை அவரும் கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கலாம். அந்தநேரத்தில் கூட்டணிகள் மாற வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 


இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக (DMDK) தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. அதேபோல தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் (Vijay Prabhakaran) தெரிவித்துள்ளார்.


ALSO READ |  லிஸ்ட்டிலே இல்லாத தேமுதிக.... நான்கு தொகுதியிலும் பின்னடைவு!!


மதுரை காளவாசலை சேர்ந்த தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக தான் என்பதை ஏற்கனவே நிரூபித்தும் காட்டியுள்ளோம். தேமுதிக ஆரம்ப காலத்தில் தனித்தே களம் இறங்கியது. சில அரசியல் சூழலின் காரணமாக கூட்டணி வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமையவாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR