விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படம்!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகனுக்கு கோவை பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது. 

Last Updated : Dec 7, 2019, 11:50 AM IST
விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படம்!

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகனுக்கு கோவை பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது. 

கேப்டன் என தொண்டர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகளும் பெற்று வந்துள்ளார். இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தில் சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ மகள் கீர்த்தனாவுக்கும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது. 
இந்நிகழ்ச்சியில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

More Stories

Trending News