எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு சசிகலாவால் பாதுகாக்கபட்ட அதிமுகவை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்ற போஸ்டரால் பரபரப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்து வரும் நிலையில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு அவரின் மறைவுக்கு பின், அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டப்பட்டு இனி சசிகலாதான் பொதுச்செயலாளர் என ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதனை எதிர்த்து அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தியதால், அதிமுக கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின்பு சசிகலாவால் முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மீண்டும் அதிமுகவில் ஐயக்கியமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை  ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி கட்சியின் தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் என்றும், ஆட்சியின் தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி என்றும் என அறிவிக்கப்பட்டு அதிமுகவின் ஆட்சியை தமிழகத்தில் 5 வருடம் பூர்த்தி செய்தனர்.


மேலும் படிக்க: சசிகலா, டிடிவியை சேர்க்க ஓபிஎஸ் தீர்மானம்? எடப்பாடிக்கு எதிராக வியூகம்


அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பின்னடைவுகள் ஏற்பட்ட போது சசிகலாவிற்கு ஆதரவாகவும் தலைமைக்கு எதிராகவும் குரல்கள் எழுந்த போதும் ஆளுங்கட்சியில் பதவியில் இருந்தவர்கள் பெரிதாக இவர்களுக்கு ஆதாவு தரவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக தெரிவித்த கருத்து மிகப்பெரும் சர்ச்சையானது. 


கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் தற்போது நடந்து முடிந்த நகர உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் எதிரொலியாக தற்போது மாவட்ட அளவிலான நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்க துவங்கியுள்ளனர்.



நேற்று அதிமுக ஒருங்கினைப்பாளர் ஒ,பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கினைபாளர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார்.


இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசும் போது அதிமுக பல்டுதோல்வியை சந்தித்தற்கு பெரும் காரனமாக இருந்தது அமமுக என்றும், எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி கட்சியில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக தீர்மானமும் போட்டபட்டு உள்ளது. 


மேலும் படிக்க: முடிந்தால் எடப்பாடி பழனிசாமி, வேலுமணியை கைது செய்து காட்டுங்கள்: சசி ஆதரவாளர் ஆவேசம்


குறிப்பாக சசிகலா மற்றும் தினகரனை குறி வைத்தே இந்த தீர்மானம் போடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வரும் 5ம் தேதி முறைப்படி தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. இதில் முறைப்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி சசிகலா மற்றும் தினகரன் தலைமையில் அதிமுக செயல்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதேபோல கிருஷ்ணகிரியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி விலக வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.


அந்த போஸ்டரில் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டு சசிகலாவால் பாதுகாக்கபட்ட அதிமுகவை சந்தர்ப்ப சூழ்நிலையால் கைப்பற்றி தொடர் தோல்விக்கு காரணமான ஓ.பண்ணீர்செலவம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.


சசிகலா கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என போஸ்டரில் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரால் கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் இடையே பரபரப்பு நிலவி வருகிறது.


அதிமுகவில் ஏற்பட்டுள்ள புயல், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க: ஓ.பி.எஸ்-ன் குட்டிக்கதை சசிகலாவுக்கா? ஜெயக்குமார் விளக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR