சென்னை:  கொரோனா வைரஸ் (coronavirus pandemic) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து (Semester exams) செய்து, அடுத்த கல்வியாண்டிற்கு மாணவர்கள் செல்ல அனுமதி அளித்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தரப்பில் கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய் மத்தியில் பரீட்சைகளை நடத்த முடியாது என்று கூறியுள்ளது.


கலை, அறிவியல், பொறியியல், கணினி அறிவியல் படிப்புகளின் பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களின் கீழ் பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ - AICTE) வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த செமஸ்டர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி (Tamil Nadu Chief Minister K. Palaniswami) கூறினார்.


ALSO READ | பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியமில்லை.. இனி ஆன்லைன் வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன்


அதாவது 2019-20 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் (semester examinations for the year 2019-20) எழுதாமல், அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவ-மாணவிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று தெரிவித்தார். இருப்பினும் இந்த அறிவிப்பில் இறுதி கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இறுதி செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. 


இறுதி ஆண்டு மாணவர்கள் ஆன்லைன் (Online Exam) மூலம் தேர்வுகளை எழுத அறிவுறுத்தப்படலாம். ரத்து செய்யப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிலாக மாணவர்களை மதிப்பீடு செய்ய கல்லூரிகள் உள் தேர்வு மதிப்பீடுகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படும். இருப்பினும் இது குறித்து இறுதி அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.


ALSO READ | பள்ளி, பல்கலைக்கழகம், பொறியியல் நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட வேண்டும்: மத்திய அரசு


முன்னதாக கொரோனா (COVID-19) காலத்தில் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்த நடத்துவது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க தமிழ் மாநில அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.