சிவகங்கை அருகே தமறாக்கியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மக்கள் விரும்பும் திட்டங்களை பாஜக செய்தால் அதனுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று பதிலளித்தார்.
லண்டன் சொத்து குறித்த கேள்விக்கு, லண்டனில் எனக்கு எந்த சொத்தும் இல்லை. அப்படி இருந்தால் அதனை நானே அரசிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறிய TTV தினகரன், எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் ஏதோதோ பிதற்றுவதாகவும் கூறினார்.  திருச்சி மாநாட்டிற்கு OPS அழைப்பு விடுப்பது என்பது அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி என்றவர், அதில் நான் கலந்து கொள்வது குறித்து அப்புறம் பார்க்கலாம் என்றும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உதகை சிறப்பு ரயில் சீசன் தொடங்கியாச்சு...கோடையை கொண்டாடுங்கள்!!


சிவகங்கை மாவட்டம், தமறாக்கியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் பிதற்றுகிறார் என பேட்டியளித்தார்.  அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுபயனம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமராக்கியில் கட்சி கொடியை ஏற்றி வைத்ததுடன் ஊராட்சிமன்ற தலைவரும் அமமுக அம்மா பேரவை மாவட்ட இனை செயலாளருமான முருகானந்தம் அவர்களின் காதனி விழாவில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எட்ப்பாடி பழனிச்சாமி அண்ணாமலைக்கு எதிராக தெரிவித்த கருத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் பிதற்றுகிறார் என்றும், தனக்கு லண்டனில் சொத்து இருந்தால் நானே அரசிடம் ஒப்படைத்துவிடுவேன் என்றும் எடப்பாடியின் உளறலுக்கெல்லாம் பதி சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார். 



பா.ஜ.கவுடன் கூட்டனியா என்கிற கேள்விக்கு கூட்டனி குறித்து இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என ஏற்கனவே தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டை பாதிக்க கூடிய திட்டங்களை குறிப்பாக ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகள் பொது மக்கள் எதிர்த்த திட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய ஆளும் அரசிற்கு எதிராக அந்த கருத்தை தெரிவித்தேன். இனி வாழ்நாள் முழுவதும் இல்லை என தெரிவிக்கவில்லை என்றும் அன்மையில் கூட நிலக்கரி ஆய்வறிக்கை வெளியிட்ட பிறகு எதிர்ப்பு தெரிவித்தோம் உடனடியாக மத்திய அரசும் திரும்ப பெற்றதும் மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டுவந்தால் எதிர்ப்பதும், நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது ஆதரிப்பதும் இயல்பு என்றும் தெரிவித்த அவர் ஒ.பி.எஸ் மாநாடு குறித்த கேள்விக்கு மாநாட்டிற்கு பின் என்ன விளைவு ஏற்படும் என பொருத்திருந்து பார்ப்போம் என தெரிவித்தார். 


ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு ஏற்கனவே இருந்த மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின்போது எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் பதவிக்காலம் வரை நீடிக்கலாம் என்கிற சட்டத்தை தேவையில்லாமல் கிழித்து எரிந்து போராட்டம் நடத்தி நீக்கிய ராகுல் காந்தி மீது புதிதாக அவர் கொண்டு வந்த சட்டமே அவர் மீது பாய்ந்துள்ளது. நீதிமன்றம் தானே தண்டனை வழங்கியுள்ளது. என்றும் நீதிமன்றத்தில் அரசின் தலையீடு இருக்க வாய்ப்பில்லை என பேட்டியளித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மேலும் படிக்க | ஆருத்ரா நிறுவனம் அண்ணாமலைக்கு சொந்தமானதா? விசிக வன்னி அரசு கேள்வி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ