BJP Chief Annamalai: ’என்னை மாத்தனும்மா மோடிகிட்ட போங்க’ சொந்த கட்சிக்காரர்களை சாடிய அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, என்னை மாத்துனும்னா மோடிக்கிட்ட டெல்லி போய் நேரா கம்ப்ளைண்ட் கொடுங்க என ஆவேசமாக கூறினார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 10:52 AM IST
  • தமிழக பாஜக தலைமை மாற்றம்?
  • டெல்லிகிட்ட கம்ப்ளைன்ட் கொடுங்க
  • அண்ணாமலை ஓபன் டாக்
 BJP Chief Annamalai: ’என்னை மாத்தனும்மா மோடிகிட்ட போங்க’  சொந்த கட்சிக்காரர்களை சாடிய அண்ணாமலை title=

தமிழக பாஜகவில் சீனியர்களை அண்ணாமலை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு டெல்லி வரை ஏற்கனவே சென்றுவிட்டது. மேலும், அவருடைய நடவடிக்கைகளில் கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னணி நிர்வாகிகள் யாரும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அண்ணாமலை கலந்து கொள்ளும் விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அண்ணாமலையும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாநில தலைவர் பதவியில் தான் இருப்பதால், தான் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் மாநிலத்தில் இருக்கும் கட்சி தலைவர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஆனால், சீனியர்களுக்கு டெல்லி லாபி இருப்பதால் அண்ணாமலை நடவடிக்கைகளையும், அதனால் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரையும் நொடிக்கு நொடி ரிப்போர்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிட்ட ரஃபேல் வாட்சு பில் - யார் இந்த கோவை சேரலாதன்?

இது அண்ணாமலைக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும், தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை. இது குறித்து டெல்லிக்கு சென்றபோதும் அங்கும் சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேநேரத்தில் டெல்லி தலைமை எதிர்பார்த்தளவுக்கு கடுமையாக நடந்து கொள்ளாததால் கொஞ்சம் மகிழ்ச்சியில் இருந்த அவர், பிரதமர் தமிழகம் வரும்போது தன்னை அழைக்காததால் வருத்தத்தில் இருந்துள்ளார். டெல்லியில் எல் முருகன் நடத்திய தமிழ் புத்தாண்டு நிகழ்விலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதுகுறித்து பாஜவினருக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அரசியல் தளத்தில் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி காய்களை நகர்த்த தொடங்கிவிட்டதாக பேச்சுகள் எழத் தொடங்கியது.

அதற்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டு பேசும்போது விளக்கம் கொடுத்தார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழகம் வரும்போது கர்நாடக தேர்தல் வேலைகள் இருந்ததால் அதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதன்பேரிலேயே பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என விளக்கமளித்திருக்கிறார். மேலும், தமிழக பாஜக தலைவர் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பேச்சுகள் பரவலாக எழுந்துள்ளதற்கும் பதில் அளித்திருக்கிறார் அண்ணாமலை. என்னை மாத்தனும்னா டெல்லிக்கு போய் நேரடியா மோடிக்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுங்க, நான் என்னை மாத்திக்க மாட்டேன். இப்படி தான் இருப்பேன் என அதிரடியாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அரசியலுக்காகவே இப்போது சென்னையில் குடியேறி இருப்பதாகவும், அதன்பின்னர் சொந்த ஊரான கிராமத்துக்கு சென்றுவிடுவேன் என தெரிவித்துள்ளார். சென்னையில் இப்போது குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் கார், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான ஊதியத்தை நண்பர்கள் மட்டுமே கொடுப்பதாக தெரிவித்திருக்கும் அண்ணாமலை, என் குடும்பத்தில் யாரும் அரசியல்வாதிகள் இல்லை, எனக்கு அரசியல் வழிகாட்டி யாரும் இல்லை என கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு மூலம் தமிழக பாஜக தலைமையில் மாற்றம் விரைவில் நடந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என்பதை கூறுவது போல் இருப்பதாக பாஜக வட்டாரத்திலேயே சத்தமாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | அண்ணாமலை வெளியிடப்போவது திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலா? சொத்து பட்டியலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News