தமிழக முதலமைச்சர் இதற்கு முன்பு வெளிநாடு சென்று வந்தபோதெல்லாம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் தமிழகத்தில் எங்காவது முதலீடுகள் வந்துள்ளதா என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பைபிள், கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சண்டாளன் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த வார்த்தையை கூறியதற்காக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அநியாயம். நானே ஒரு தாழ்த்தப்பட்டவன் என் மீது ஏன் வழக்கு தொடுத்துள்ளனர். என்னுடைய அரசியலை சமாளிக்க முடியாத காரணத்தால் என் மீது ஏதாவது ஒரு வழக்கை தொடுத்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோயம்புத்தூரில் உள்ள இந்த ரகசிய இடங்களை சுற்றிப்பார்க்க மறக்காதீங்க!


விளையாட்டில் ஆர்வம் இருந்தும் விளையாட வாய்ப்பு இல்லாத சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு கைப்பந்து, கால்பந்து, ஈட்டு எரிதல் போன்ற பயிற்சிகள் கொடுத்து உரிய போட்டிகளை நடத்த வேண்டும். மேல் தட்டு மக்களுக்கான இந்த பார்முலா கார் பந்தயம் தேவையற்றது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் இந்த கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது, இது அநியாயம் எனக் கூறிய அவர், கார் பந்தயம் நடக்கும் இடத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை மாற்றி அமையுங்கள், சித்தலமடைந்துள்ள ஆயிரகாணக்காண பள்ளிக்கூடங்கள், மேற்கூரைகள் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் படித்து வருகின்றனர். 


300 பெண்கள் படிக்கக்கூடிய பள்ளியில் இரண்டு கழிப்பறை மட்டும் உள்ளது. இதையெல்லாம் சீரமைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர்கள் இதற்கு முன் எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளனர். 10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. 30,000 பேருக்கு வேலை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கூறினார். இந்த முதலீடாவது ஈர்க்கப்பட்டதா? இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றார். இப்போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் ஏதாவது தமிழகத்திற்கு வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய சீமான், தமிழகத்தில்  போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பது தான் பாலியல் சீன்டலுக்கு காரணமாக அமைகிறது. 


மாத்திரை, ஊசி உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக பாலியல் சீன்டல்களும் அதிகமாக நடைபெறுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். போதைப் பொருட்கள் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் விஜய்யுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி விஜய்யின் தமிழக வெற்றிக் கலக்கத்துடன் கூட்டணியில்லை, என்றும் 2026ல் 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றும், தற்போதே 60 வேட்பாளர்கள் தேர்வு செய்து விட்டேன் என்றும் தூத்துக்குடியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் ஆட்சி.... திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ