சமீப காலமாக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான மோதல் அதிகரித்து வருகிறது. ஆசிரியரை ஒரு மாணவர் அடிக்க கையை ஓங்குவது ; ஆசிரியர்களிடம் அசிங்கமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவது, சாலைகளில் மாணவர்கள் அடித்துக் கொள்வது, பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி நடத்துநரிடம் ஆவேசமாக பேசுவது, பொது இடங்களில் மாணவிகள் பீர் குடிப்பது, காதலனுக்காக மாணவிகள் பேருந்து நிலையங்களில் அடித்துக் கொள்வது,  வகுப்பறைகளில் உள்ள மேசைகளை அடித்து உடைப்பது போன்ற பல்வேறு மாணவ, மாணவியர்களின் வீடியோக்கள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்துகொண்டே இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தேதி அறிவிப்பு!


ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான இந்த மோதல், ஒரு சமூகம் சீழ்பிடித்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகத்தான் பார்க்க முடிகிறது. தினந்தோறும் மாணவர்களின் இந்தச் செயல்கள் வாட்ஸ்அப்  வீடியோக்களில் வைரலாக பரவி வருகின்றனர். இருதரப்பினருக்கான இந்த மோதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான மோதல் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, ‘வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. இந்த விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொறுப்பல்ல. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. 


மேலும் படிக்க | திமுகவின் ஓராண்டு ஆட்சி:சாதனையா? சோதனையா?


ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ மாணவர்கள் தொந்தரவு தந்தால் உடனடியாக நீக்கப்படுவார்கள். அப்படி நீக்கப்படும் மாணவர்களின் TC-யிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுவோம். அதேபோல், ஆசிரியர்களுக்கு மன ரீதியாகவோ ஒழுங்கீனமாகவோ மாணவர்கள் நடந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, மாணவர்கள் பள்ளிக்குச் செல்போன் எடுத்து வரக்கூடாது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR