அனைத்து பழியையும் ஆளுநர் மீது போட்டு தப்பிக்க முடியாது - திமுகவை எச்சரிக்கும் அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் இன்று (நவ. 29) சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு, மாநில அரசு பாதுகாப்பு அளிக்க தவறியதை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கியிருக்கிறோம்.
தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் திட்டத்தில் மாநில அரசு ஏராளமான முறைகேடு செய்திருப்பதை ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து வழங்கியிருக்கிறோம்.
மேலும் படிக்க | இலங்கையில் 23 தமிழ் மீனவர்கள்... மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
ஆளுநரிடம் தமிழகம் முழுவதும் லஞ்சம் அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநரிடம் பாஜகவின் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறோம். அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த போதிலும், சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யவில்லை.
சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி. சட்டத்தின் மீதான சில சந்தேகங்களையும் மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் சாதாரண மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் என சொல்லுவதற்கு கூட இங்கு தயங்குகின்றனர்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநர் மீது அனைத்து பழியையும் போட்டுவிட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது. ஆளுநர் ஒப்புதல் அளித்த அவசர சட்டத்திற்கு அரசாணையைக் கூட மாநில அரசு பிறப்பிக்கவில்லை" என குற்றஞ்சாட்டினார்.
ஆளுநர் பதவி காலாவதியான பதவி என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை,"எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டை கிழிந்த நிலையில், மு.க. ஸ்டாலின் சந்தித்த முதல் நபர் ஆளுநர்தான் என்பதை கனிமொழி கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | 'தமிழ்நாட்டில் ராணுவ வீரரையே மிரட்டுகின்றனர்...' - சட்ட ஒழுங்கு குறித்து அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ