ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரஜினி பட இயக்குநரின் மனைவிக்கு தொடர்பு...? - பரபரப்பு தகவல்கள்!
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரஜினி படத்தை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநரின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Armstrong Murder Case Latest News Updates: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். வடசென்னையை சேர்ந்த இவர் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலித் தலைவராக அறியப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கை பொதுவெளியில் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. சிபிசிஐடி வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த கொலை வழக்கில் தற்போது வரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து இவ்வழக்கில் ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் குறித்து போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து போலீசார் மொட்டை கிருஷ்ணன் குறித்து விசாரிக்க தொடங்கினர்.
நெல்சன் மனைவிக்கு சம்மன்
மொட்டை கிருஷ்ணனின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்ததில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம், முட்டை கிருஷ்ணன் அடிக்கடி பேசியது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து, மோனிஷாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை: தண்ணீர் காட்டும் சம்போ செந்தில்... மும்பையில் போலீஸ் முகாம்
வழக்கறிஞர் மோனிஷா
விசாரணையில் மோனிஷா போலீசாரிடம் சில தகவல்களை கூறியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தான் ஒரு வழக்கறிஞர் என்றும், வழக்கு குறித்து மட்டுமே செல்போனில் மொட்டை கிருஷ்ணன் பேசியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் வீட்டில் தங்கிய மொட்டை கிருஷ்ணன்
மொட்டை கிருஷ்ணன் குறித்து தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தெரிய வந்திருக்கிறது. வெளிநாடு செல்வதற்கு முன் மொட்டை கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி நெல்சனின் வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. எனவே மொட்டை கிருஷ்ணனுக்கும் நெல்சனுக்கும் என்ன தொடர்பு? எதற்காக அடைக்கலம் கொடுத்தார் என இயக்குனர் நெல்சனிடம் விரைவில் போலீசார் விசாரணை நடத்த இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
யார் இந்த இயக்குநர் நெல்சன்?
இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். தொடர்ந்து, இவர் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான பணியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல பிக்பாஸ் தொடரிலும் இவர் பணியாற்றியிருந்தார்.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இருப்பினும், அந்த திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. நெல்சனின் படங்களில் போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், மாஃபியா போன்ற அம்சங்கள் நிறைந்திருக்கும்.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடியின் மகன் அஸ்வத்தாமன் கைது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ