மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் ஆவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக மாணவர்களுக்கு என தமிழக கலவித்துரை அமைச்சர் செங்கோட்டையன் பல சலுகைகளை அறிவித்து வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வருகை பதிவேடுக்கு பதில் கைரேகையை கொண்டு வருகையை கணக்கிட புதிய முறையை அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்திருந்தார்.


மேலும், தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச வழிவகுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாணவா்களின் வருகையை பேஸ் ரீடிங் முறையில் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இந்த முறையில், மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த முறை  இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் டிசம்பர் 10 ஆம் தேதி பதிய முறை அறிமுகமாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.