மாண்டஸ் புயல்: சாலையில் சீறி பாயும் கடல் அலைகள்! மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் புயல் காரணமாக கடல் அலைகள் சீறி பாய்ந்து சாலையைக் கடப்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வடசென்னை பொருத்தவரை நேற்று இரவு முதல் அதிகளவு காற்று வீசப்படுவதால் கடலோரப் பகுதிகளில் அலைகள் சீறி பாய்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னை எண்ணூர் விரைவு சாலை தாதாங்குப்பம் பகுதியில் கடல் அலைகள் மாண்டெக்ஸ் புயல் காரணமாக 100 முதல் 200 மீட்டர் வரை சீறி பாய்ந்து சாலையை கடந்து செல்லும் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மிரட்டும் மாண்டஸ் புயல்: எச்சரிக்கை பணிகள் தீவிரம்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மேலும் அப்பகுதியில் உள்ள கடல் அலையானது சுமார் 15 முதல் 20 அடி வரை எலும்புவதால் அப்பகுதியில் அருகே வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கடல் அலையை காணவோ செல்போனில் செல்ஃபி போன்ற செயல்கள் ஈடுபடவோ வேண்டாம் என்று அரசு அதிகாரிகளும் மற்றும் காவல் துறையினரும் எச்சரித்து வருகின்றனர்.
மேலும் மாண்டச் புயல் காரணமாக தமிழக அரசின் அறிவிப்பு விடுத்ததை அடுத்து பகுதியில் உள்ள விசைப்படகுகள் நேற்று பாதுகாப்பான முறையில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வடசென்னை கரையோரப் பகுதியில் உள்ள திருவொற்றியூர் காசிமேடு துறைமுகம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசப்படுவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே தெரிய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மாண்டஸ் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை; தலைமைச் செயலாளரின் ஒருங்கிணைப்புக் கூட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ