பாபர் மசூதி இடிப்பு தினம் - கோவையின் முக்கிய இடங்களில் சோதனை!
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையின் பல முக்கிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
பாபர் மசூதி இடிப்பு தினம் வரும் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையம், பேருந்துநிலையங்கள் , மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் உள்ளிட்ட கோவையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சோதனை மாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ALSO READ ஓடும் காரில் திடீர் தீ விபத்து! குழந்தையுடன் தப்பிய தம்பதி!
அதன் ஒருபகுதியாக இன்று காலை ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பார்சல் அலுவலகங்களில் எந்த மாதிரியான பொருட்கள் அனுப்பப் படுகிறது என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கோவை வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பாபர் மசூதி தினம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
ALSO READ திமுக அரசாங்காத்திற்கு எதிராக பேசினால் கைது செய்வார்களா? - H. ராஜா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR