ஓடும் காரில் திடீர் தீ விபத்து! குழந்தையுடன் தப்பிய தம்பதி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த தம்பதி மற்றும் பெண் குழந்தை உயிர் தப்பினர்.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 3, 2021, 10:14 PM IST
ஓடும் காரில் திடீர் தீ விபத்து! குழந்தையுடன் தப்பிய தம்பதி!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மோகனபிரியா. இவர்களுக்கு இரண்டரை வயதில் தட்சண்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு மணிகண்டன், மனைவி மற்றும் குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

ALSO READ Dindigul: கணவருடன் சேர்த்து வைக்கவும்: எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா

ஒட்டன்சத்திரம் - பழனி நெடுஞ்சாலையில் இருந்த மேம்பாலத்தில் சென்றபோது காரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியது. இதனால், மணிகண்டன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியேறினர்.  அதற்குள் காரில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

dindigul

dindigul

அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

ALSO READ மதுரையில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News