திமுக பக்கா பிளான் - ராமநாதபுரத்தில் மீண்டும் IUML... வேட்பாளரும் உடனே அறிவிப்பு!
INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக (INDIA) கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024, INDIA Alliance: மக்களவை தேர்தல் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. நேற்றும், இன்றும் தமிழ்நாட்டில் தனது ஆய்வுகளை மேற்கொண்டது. உத்தர பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஆய்வுகளை முடித்த பின்னர், மார்ச் மாதம் முதலிரண்டு வாரங்களில் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜகவும், தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை இழந்து தற்போது தேசியளவில் பெரிய கூட்டணியை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சியும் அதன் தேர்தல் பணிகளை வெகு சிக்கிரமாகவே தொடங்கிவிட்டன. காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணியில் பெரிய குழப்பம் நிலவி வந்தாலும், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே பல்வேறு மாநிலங்களில் இன்று தொகுதி பங்கீடு உறுதியானது.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் திமுக INDIA கூட்டணியில் முன்னணி வகிக்கிறது. திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன என்பவை இன்னும் தெளிவாகவில்லை. பாமக போன்ற கட்சிகள் யார் பக்கம் என்றும் இன்னும் உறுதியாகவில்லை.
மேலும் படிக்க | திண்ணை பிரச்சாரம்: திமுக மகளிரணிக்கு கனிமொழி புதிய டாஸ்க்
அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி, அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மக்களவை தேர்தலில் திமுக (INDIA) கூட்டணியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், "ராஜ்யசபா குறித்து இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் அவர்கள் உறுதி அளிக்கவில்லை. மக்களவை பற்றி மட்டும் யோசிப்போம். தேர்தலுக்குப் பிறகு அது குறித்து பேசுவோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்" என அறிவித்தார்.
கடந்த மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரத்தில்தான் போட்டியிட்டது. அதன் சார்பாக, ஏணி சின்னத்தில் நின்று வெற்றி நவாஸ் கனி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார், அவரே இந்த முறையும் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி நீண்ட காலமாக திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியாகும். எப்போதும் தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது, ஐஎம்யூஎல் கட்சிக்குதான் முதல் அறிவிப்பு வெளியாகும். அதேபோல், தற்போதும் ஐஎம்யூஎல் கட்சிக்கு தொகுதி ஒதுக்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என பல செய்திகள் பரவி வந்த நிலையில், அங்கு எதிர்கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. பாஜக தரப்பில் கடந்த முறை நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவரது மகன் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த முறை அதிமுகதான் பாஜகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியது. எனவே, இம்முறை அதிமுக சார்பிலும் இங்கு போட்டியிட வாய்ப்புள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் மட்டுமின்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ