என்ன பிசுபிசுனு இருக்கு? மாத்திரையா இது? அரசு மருத்துவமனையின் அவல நிலை!
Chennai Latest News: ஆவடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட மாத்திரைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்த முழு தகவல்களை இங்கு காணலாம்.
Chennai Latest News: சென்னையை அடுத்த ஆவடி காந்தி தெருவைச் சேர்ந்தவர் கலில். இவர் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் மாதந்தோறும் ஆவடி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அதேபோல இந்த மாதத்திற்கான மாத்திரைகளை ஆவடி அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் வாங்கியுள்ளார்.
அலட்சியம்
சோடியம் வால்ப்ரோயேட் என்னும் இந்த மாத்திரையை வாங்கிச் சென்று பிரித்து பார்த்தபோது, அவை தரமற்று இருந்துள்ளது. கவரில் இருந்த மாத்திரைகள் பிசுபிசுவென கூழ் போல இருந்ததை கண்டு கலில் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அரசு மருந்தகத்திற்கு சென்று கேட்டபோது, அங்கிருந்தவர்கள் அதே மாத்திரைகள் சிலவற்றை கூடுதலாக கொடுத்து விட்டு, பிசுபிசுவென இருக்கும் மாத்திரைகளுக்களை விட்டு விட்டு மற்ற மாத்திரைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
வீடியோ வைரல்
மாத்திரைகள் தரமற்று இருப்பது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில், இது குறித்து ஆவடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன் கவனத்திற்கு வந்தவுடன் இது பற்றி விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக்கோரி பாஜக போராட்டம்-அண்ணாமலை அறிவிப்பு!
குளிர்சாதன வசதியில்லை
மேலும், ஆவடி அரசு மருத்துவமனைக்கு, சென்னை அண்ணா நகரில் இருக்கும் அரசு மருந்து கிடங்கில் இருந்து தான் மருந்துகள் சப்ளை செய்யப்படுவதாகவும், அவர்களிடம் கேட்டதில், மருந்துகளை ஏ.சி. அறையில் வைக்காததே மாத்திரைகள் இப்படி கூழ் போல ஆனதற்கு காரணம் என்றும் விளக்கம் அளித்தார். ஆவடி அரசு மருத்துவமனையின் தற்போது உள்ள கட்டடத்தில் குளிர்சாதன வசதி இல்லை என்றும், விரைவில் திறக்கப்பட உள்ள புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதால், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை
என்ன தான் முதன்மை மருத்துவ அலுவலர் இப்படி விளக்கம் அளித்தாலும், உயிர் காக்கும் மாத்திரைகள் இப்படி தரமற்று இருப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த மாத்திரைகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் பேர் மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளில் இருந்து தான் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் இந்த விவகாரத்தை தமிழக அரசு தலையிட்டு மக்கள் உயிரை காக்க முன்வர வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | தடுப்பூசி போடாததால் சிறுமி உயிரிழந்ததாக தந்தை பரபரப்பு புகார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ