மயிலாடுதுறை மாவட்டம்  தருமபுரஆதீனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின்போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வது  வழக்கமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தூக்குவது மனித மாண்புக்கே எதிரானது என திராவிடர் கழகத்தின் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இச்சூழலில் வருகின்ற  மே மாதம் 22ஆம் தேதி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி ஆதீனத்தில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு திராவிடர் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர்  பாலாஜி பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.



இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ தருமபுரம்  ஆதினம் பட்டினப் பிரவேசம் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஏன் அரசு திடீரென தடை விதிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பாஜக இதனை தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அரசு இதனை பரிசீலிக்கும் என நம்புகிறோம். கூலிக்காகவோ அல்லது இழிவாக இருந்தோ ஒருவரை தூக்குவது தவறு அதனை பாஜக விரும்பவில்லை.


மேலும் படிக்க | நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு....சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்


ஆனால் குரு என்பவர் கடவுளுக்கு சமமானவர் எனவே அவரை தூக்குவது தவறு இல்லை. ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் இதனை தடை செய்யவில்லை. ஆனால், ஸ்டாலின் அரசு தடை செய்வதன் அவசியம் என்ன? பட்டின பிரவேசம் கண்டிப்பாக நடைபெறும். நானே போய் பல்லக்கை தூக்குவேன். 


ஆசை, பற்று அனைத்தையும் தாண்டியவர்கள் குருமார்கள். இவர்களை தமிழ்நாடு அரசு  மிரட்டி அவர்களுக்கு எதிராக செயல்பட்டுவருகிறது. இதனை உடனடியாக முதலமைச்சர் கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி முதலமைச்சரே முன் நின்று இந்த பட்டின பிரவேசம் நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்றார்.



மேலும்,தனது இலங்கை பயணம் குறித்து பேசிய அவர், “நான்கு நாள்கள் இலங்கை தீவுக்கு பயணம் மேற்கொண்டேன். மே 1ஆம் தேதி நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றேன். இலங்கையில் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு மத்திய அரசு சார்பில்  4 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இன்னும் 10 ஆயிரம் வீடுகள் கூடுதலாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசால் கட்டித்தரப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பட்டினப்பிரவேசமும் ஆதீனங்களின் குமுறலும்: மத்திய அரசிடம் செல்லுமா புகார் பட்டியல்


இலங்கை பொருளாதார நெருக்கடியின் உள்ளது. இதன் காரணமாக  1.5 பில்லியன் இந்தியா அரசு இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல்  அரிசி, காய்கறி மற்றும் மருத்துவம், பெட்ரோலியம் உள்ளிட்டவை இந்திய அரசு சார்பில்  அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தமிழ் சார்ந்த கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில்  பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR