திமுகவின் கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் கோவை அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பே, டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, வாக்காளர்களுக்கு தலா 250 ரூபாய் வீதம் பணம் அனுப்பப்படுவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அலுவலகத்தில் தங்கி இருப்பவர்களின் பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களுடன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடிக்கு இந்த புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


இது தொடர்பாக தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், "பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில் இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPay மூலம் பணம் அனுப்பி வருகிறார். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வேளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நட்டத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜாக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். 


அவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார். கீழ்க்கண்ட வெளி மாவட்டத்தைச்சேர்ந்த நபர்கள் பணம் வினியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிமாவட்டத்தினரை தொகுதியைவிட்டு வெளியேற்றியும் வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பனம் வினியோகிப்பவர்கள் மீதும் இவர்களை வழிநடத்தும் பாஜக வேட்பாளர் திரு. அண்ணாமலை மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளனர்.


மேலும், நேற்று மாலை கோவை பந்தயசாலை காஸ்மோபோலிடன் கிளப் அருகி  பாஜகவினர் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தாமரை சின்னத்துடன் கூடிய ராமர் படம் வழங்கப்பட்டது. தாமரை சின்னம் பதித்த ராமர் படத்தை பொதுமக்களுக்கு கொடுத்து பா.ஜ.கவினர் வாக்குசேகரித்த நிலையில் அங்கு வந்த வழகறிஞர் லோகநாதன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் தேர்ரதல்  பிரச்சாரத்தில் மததுஷ்பிரோகம் செய்யக்கூடாது, கடவுள்களை முன்நிறுத்தகூடாது என்ற விதிமுறை இருக்கும் போது, அனைத்து சமுதாய மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை விநியோகித்து வருகின்றனர் என புகார் அளிக்கப்பட்டது. இதை  தொடர்ந்து பாஜகவினரிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமர் படங்களை பறிமுதல் செய்த போலீசார் வழகறிஞர் லோகநாதனிடம் புகார் பெற்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ