கோவையில் மோசடி


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி மற்றும் இரு பெண்கள். அவர்களடம் வினோத் என்பவர், தான் பாஜகவில் உறுப்பினாராக இருக்கிறேன் என்றும், மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறி பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 


மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்


பணம் வசூலித்த பாஜக நிர்வாகி


இது குறித்து அப்பெண்கள் கூறுகையில், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருந்தோம். அப்போது, வினோத் என்பவர் தங்களிடம் பாஜகவில் இருக்கிறேன் என்று கூறி அறிமுகமானார். அவர், மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறினார். ஏற்கனவே தங்களால் பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணத்தை காண்பிததார். அவர் கட்சியில் இருக்கிறேன் என்று கூறியதாலும், ஏற்கனவே பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணங்களை காண்பித்ததால் அதனை நம்பிவிட்டோம். 


லட்சக்கணக்கில் பணம் இழப்பு


மேலும், இதற்காக எங்களிடம் பணம் கேட்டார். பல பேரிடமும் மோடி வீடு திட்டத்தில் வீடு வாங்கி கொடுப்பதாக பணம் வசூலித்தார். எங்களால் இயன்ற பணத்தை 1 லட்சம், 50 ஆயிரம் என்று தந்தோம். தற்போது அந்த பணத்தை எல்லாம் பெற்று கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்து தராமல் ஏமாற்றி விட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். வினோத்தை நேரடியாக காவலர்கள் முன்பு நிறுத்தியும், FIR பதிவு செய்யாமல் CSR  மட்டுமே வினோத் மீது பதிவு செய்ததாக தெரிவித்தனர். தற்போது அந்த வினோத்திடம் பணத்தை கேட்டு சென்றால் எப்போதும் வீட்டில் இல்லை என்று கூறுகிறார்கள். எனவே வினோத் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்" என கேட்டுள்ளார்.


மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ