காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்த எச். ராஜா உட்பட ஐந்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர். மயிலாடுதுறையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஐந்து பேர் மீது புகார் அளித்தனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவரும், எம்எல்ஏவும் ஆன ராஜ்குமார் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஐந்து புகார் மனுவினை டிஎஸ்பி திருப்பதியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்தனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா, உத்திரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு ஆகியோர் தேச விரோதி என்றும், இந்தியாவின் நம்பர் ஒன் பயங்கரவாதி எனவும் தரக்குறைவாக பேசியிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆதவ் அர்ஜூனா புரிதல் இல்லாமல் பேசி இருப்பார் - திமுக ஆ ராசா!


அதுமட்டும் இன்றி சஞ்சய் கெய்க்வாட் என்பவர் ராகுல் காந்தியை படுகொலை அல்லது உடலில் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்த நிலையில், பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மர்வா நிகழ்ச்சி ஒன்றில் எதிர்காலத்தில் இந்திரா காந்தியை போல படுகொலை செய்யப்படுவீர்கள் என நேரடியாக ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து தனிப்பட்ட வெறுப்பு நிறைந்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தை பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏற்படுத்த முயல்வதாகவும், சம்பந்தப்பட்ட ஐந்து நபர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு - செல்வப் பெருந்தகை


கரூர் குளித்தலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றார். கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ ஈரோடு சென்றார். செல்லும் வழியில் குளித்தலை பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை யாருக்கும் இடையூறாக இருப்பதாக தெரியவில்லை, காந்தி சிலையை அகற்றுவது என்பது மிகப்பெரிய பின் விளைவுகள் ஏற்படக்கூடிய விஷயம். ஒரு முறைக்கு பலமுறை ஆலோசிக்க வேண்டும். 


அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை செய்து சாதக பாதகங்களை சீர்தூக்கி பார்த்து செய்யப்பட வேண்டும். மகாத்மா காந்தி தேசத்தந்தை  உள்ளூர் பிரமுகர் சிலையோ ஒரு நடிகரின் சிலையோ அல்ல. பின் விளைவுகள் தெரிந்து பலமுறை ஆலோசனை செய்து முடிவெடுக்கக்கூடிய விஷயம்.  இது சம்பந்தமாக நான் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சிலை அகற்றப்படுகிறது என்றால் இது  துரதிஷ்டவசமானது. சீர்தூக்கி பார்த்து செய்ய வேண்டிய விஷயம் என்றார். பேட்டியின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, மாநில இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத், பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ