மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி செல்வதாக திட்டமிடப்பட்டது. தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விழா எடுக்கப்படும். இங்கிருந்து ஞானரதம் இன்று தெலுங்கானாவிற்கு செல்ல உள்ளது. இந்த பயணத்தை ஆளுநர் ரவி தொடங்கி வைக்க உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இந்த விழாவிற்கு ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். மேலும், தமிழக ஆளுநர் தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார். தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை அவர் ஏற்கவில்லை. 420 ஆண்டுகால தமிழ்மரபு உள்ள மடமாக தருமபுரம் ஆதீனம் உள்ளது. எனவே ஆளுநரை இந்த விழாவிற்கு அழைப்பது தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். மேலும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்


இந்த நிலையில் அங்கு பாஜகவினர் கூடி ஆளுநரை வரவேற்க உள்ளனர். அதிக அளவில் பாஜகவினர் ஒன்றாக கூடி ஆளுநரை வரவேற்கும் திட்டத்தில் இருக்கின்றனர். இதனால் அங்கு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. ஆளுநரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஆளுநர் வருகையை முன்னிட்டு 2 டிஐஜிக்கள் கயல்விழி, சரவணன் தலைமையில் 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் ஆளுநர் வருகையின்போது மன்னம்பந்தல் அருகே கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் அந்தப் பகுதியில் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்தை வரவழைத்து நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆதீன மடத்துக்கு ஆளுநர் என்.ஆர்.ரவி காரில் சென்றபோது செல்லும் வழியில் கம்யூனிஸ்ட், மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிராக பதாகைகளை பிடித்து கோஷங்களை எழுப்பினர். ஆளுநர் மன்னம்பந்தல் பகுதியை கடந்து செல்லும் போது போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளுநர் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எறிந்து பதாதைகளை சாலையில் தூக்கி வீசியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் அப்பகுதியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


மேலும் படிக்க | ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR