பல்வேறு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை - தனியார் மருத்துவமனையில் எண்ணற்ற பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்த வகைகளை அவர்களின் உறவினர்கள் சமூக வலைதளங்களிலும் அதேபோல் ரத்தம் கொடை whatsapp குழுக்களிலும் பகிர்ந்து தகவல் தெரிவிப்பார்கள். இதனை பார்க்கும் தன்னார்வலர்கள் அந்த உறவினர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ரத்தம் வழங்குவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலவசமாக சேவை வழங்கும் தன்னார்வலர்கள்


மேலும் அரசு மருத்துவமனையில் தேவைப்படும் ரத்தத்தை நோயாளிகளுக்கு கொடுத்து விட்டு, நோயாளிகளின் உறவினர்களிடம் இருந்து  வேறு ஒரு ரத்த வகையை வாங்கி சேமித்து வைத்துக்கொண்டு அதை வேறு ஒரு நோயாளிகளுக்கு செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது. இதற்கு மருத்துவமனைகளையோ  - தன்னார்வலர்கள் கட்டணமாக பணத்தை எதுவும் வழங்காமல் ஒரு சேவையாகவே செய்து வருகின்றனர் எண்ணற்ற தன்னார்வலர்கள். 


ரத்தம் தேவைப்படுவதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் மோசடி


இந்நிலையில் ரத்தம் தேவைப்படுவதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் மோசடியில் (Crime News) இறங்கியுள்ளனர். ரத்தம் தேவைப்படுபவர்கள் சமூக வளைத்தளத்தில் தங்களது தொலைபேசி எண்ணை பதிவிட்டு ரத்தம் தேவை என பகிர்வார்கள். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவர்களை தொடர்பு கொண்டு தங்களிடம் உங்களுக்கு தேவையான யூனிட் ரத்தம் உள்ளது. ஆனால் நாங்கள் தொலைவில் இருப்பதாகவும், நாங்கள் வருவதற்கு போக்குவரத்து செலவு, அதே போல் சாப்பிடுவதற்கு பணம் ஆகியவை Gpay-ல்ஆயிரம் முதல் 2000 வரை செலுத்துங்கள் என கூறி பணத்தை பெறுகின்றனர். உயிருக்கு போராடும் தங்களது உறவினர்களுக்கு எப்படியாவது ரத்தம் கிடைத்தால் போதும் என நினைத்து மர்பனவர்கள் கேட்கும் பணத்தையும் யோசிக்காமல் ஜிப்பேயில் செலுத்தி விடுகின்றனர். 


தொலைபேசி எண்களையே பிளாக் செய்யும் மர்ம நபர்கள்


ஆனால் பணம் செலுத்திய பிறகு அவர்களை தொடர்பு கொண்டால் வந்து கொண்டே இருகிறோம் என கூறும் மர்ம நபர்கள் பல மணி நேரம் ஆகியும் வருவதில்லை. இறுதியில் உறவினர்களின் தொலைபேசி எண்களையே பிளாக் செய்து விடுகின்றனர். ரத்தம் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியில் இருக்கும் உறவினர்களுக்கு பின்னர் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்கின்றனர்.


மேலும் படிக்க | டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்கு பாஜக கூஜாதான் - கடம்பூர் ராஜு பேச்சு!


அப்பாவி பொதுமக்கள் ஏமாற்றப்படும் அவலம்


இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனது மாமாவை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம், அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கு AB+ இரத்தம் தேவைப்பட்டது. எனவே ரத்தம் தேவை என சமூக வலைதளத்தில் பகிர்ந்தோம். அப்போது பரணி குமார் என்பவர் தானாகவே தொடர்பு கொண்டு தங்களிடம் மூன்று யூனிட் ரத்தம் உள்ளதாகவும், நாங்கள் வருவதற்கு போக்குவரத்து செலவு சாப்பிடுவதற்கு பணம் என 700 ரூபாய் gpayல் அனுப்புமாறு கூறினார். நாங்களும் ரத்தம் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பணம் செலுத்தினோம். ஆனால் பணம் செலுத்திய பிறகு தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர் இதே போல் அதிக பேரிடம் ஏமாற்று தெரியவந்தது. 20க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை வைத்துக்கொண்டு மாறி மாறி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.


இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் தான் சிகிச்சைக்கு வருவார்கள். பதற்றத்தில் இருக்கும் அவர்களை மோசடி நபர்கள் எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள். ஆனால் இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறையாக யாரும் புகார் அளிக்கவில்லை. இந்த மோசடி நபர்களை தவிர்க்க வேண்டும் என்றால், நோயாளிகளின் உறவினர்களே ரத்தம் கொடுக்க முன் வர வேண்டும். அவ்வாறு வந்தால் மட்டும் தான் இது போன்ற மோசடிகளை தடுக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


ரத்த தானத்தை சேவையாக செய்து வரும் தன்னார்வலர்கள்


தன்னார்வலர் கூறுகையில், ரத்தம் வழங்கும் தன்னார்வலர்கள் யாரும் பணம் வாங்குவதில்லை. இரத்தம் வழங்கும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு சேவை அமைப்பினர் இதனை சேவையாக செய்து வருகின்றனர். ஆனால் இதை பயன்படுத்தி சில மோசடி நபர்கள் இதுபோல் ஈடுபடுவது வேதனையாக உள்ளது. ரத்தம் வழங்க வருகிறோம் பணம் தாருங்கள் என யாராவது கேட்டால் அவர்கள் மோசடி நபர்கள் என புரிந்து கொண்டு அவர்களை தவிர்ப்பது தான் சிறந்த வழி என கூறுகின்றனர்.


மேலும் படிக்க | 7th Pay Commsission: மத்திய அரசின் சர்ப்ரைஸ்: தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு 3 முக்கிய அறிவிப்புகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ