இந்தியாவில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
மத்திய அரசின் அறிவிப்பின்படி இந்தியாவில் மக்களுக்கு நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட இருக்கிறது.
மத்திய அரசின் அறிவிப்புப்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் தகுதியான மக்களுக்கு நாளை(ஜனவரி-10) முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்க போகிறது. இவை முதற்கட்டமாக சுகாதாரம் மற்றும் முன்னிலை பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட இருக்கிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் covisheild போடுவதா அல்லது covaxin போடுவதா என்று மக்களுக்கு குழப்பம் ஏற்படும். இந்நிலையில் இதற்கு முன் பெற்றுக்கொண்ட தடுப்பூசியை தான் பெற்றுக்கொள்ள என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு தடுப்பூசிகள் covisheildஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covisheild ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதேபோல முதல் இரண்டு தடுப்பூசிகள் covaxin ஐ செலுத்தியவர்கள், தற்போது போடப்படும் மூன்றாவது டோஸிலும் covaxin ஐ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகையில், covisheild பெற்றவர்கள் covisheild தான் பெறுவார்கள், covaxin பெற்றவர்கள் covaxin தான் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட தகுதியுள்ள மக்கள் நேரடியாக எந்த தடுப்பூசி மையத்திற்கும் சென்று பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிக்கான பதிவு நேற்றைய தினம் (சனிக்கிழமை) மாலை முதல் CoWIN தளத்தில் தொடங்கியது.
இதுகுறித்து தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கூடுதல் செயலாளரும் பணி இயக்குனருமான விகாஸ் ஷீல் பதிவிட்ட ட்வீட்டில், "HCWs/FLWs மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு விண்ணப்பம் Co-WIN ல் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய http://cowin.gov.in ஐப் பார்வையிடவும்" என்று பதிவிட்டுள்ளார். ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் தடுப்பூசிக்கான முன்பதிவுகள் நடத்தப்படும். Co-WIN அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது டோஸின் தேதியின் அடிப்படையில் (9 மாதங்கள் அதாவது இரண்டாவது டோஸ் எடுக்கப்பட்ட நாளிலிருந்து 39 வாரங்கள்) தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி நினைவுபடுத்தப்படும்.
ALSO READ | Corona Spread: நாடாளுமன்றத்தை ஆக்ரமித்த கொரோனா! 400 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR