Corona Spread: நாடாளுமன்றத்தை ஆக்ரமித்த கொரோனா! 400 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி!

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த தொற்றுப் பரவல் கவலைகளை அதிகரித்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 9, 2022, 12:46 PM IST
  • நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்காத கொரோனா
  • 402 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி
  • பட்ஜெட் கூட்டத்தொடரையும் பாதிக்குமா கொரோனா?
Corona Spread: நாடாளுமன்றத்தை ஆக்ரமித்த கொரோனா!  400 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி! title=

புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் (Coronoa Spread) குறைந்தபட்சம் 400 பணியாளர்கள் மற்றும் பாராளுமன்றத்தில் பணியாற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த தொற்றுப் பரவல் கவலைகளை அதிகரித்துள்ளது...

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.  கடந்த ஜனவரி 6 முதல் 7ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | டெல்டா- ஒமிக்ரானின் கலவை மாறுபாடால் உலகில் பதற்றம்

402 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அதிகாரபூர்வ தகவல்களின்படி, 400 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஊழியர்கள் கோவிட் தொற்றால் (Covid Infection) பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 4 முதல் 8 வரை, நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 1,409 ஊழியர்களில் 402 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதன் பிறகு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டன.

பல அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
தகவலின்படி, மக்களவையில் 200 ஊழியர்கள், மாநிலங்களவையில் 69 பேர் மற்றும் 133 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்த ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனுடன், அவருடன் தொடர்பு கொண்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பல அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் சனிக்கிழமை 20,181 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளது.  

தலைநகர் டெல்லியில் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க, நகரம் முழுவதும் வாரயிறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒற்றைப்படை எண் அடிப்படையில் கடைகள் திறக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

ALSO READ | ஊரடங்கு: கோவையில் முழு அடைப்பு, வெறிச்சோடிய சாலைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News