சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதிலும் ஞாயிறு ஊரடங்கு தொடரும் என அரசால் வலியுறுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், கொரோனா நிவாரண நிதியாக, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகின்றது. 


இந்த நிலையில், நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு (Lockdown) இருக்கும் என்பதால், நாளை நியாய விலை கடைகளில் 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடையே இருந்தது. இந்த சந்தேகத்தை தெளிவு செய்யும் விதமாக, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் நியாய விலை கடையில் கொரோனா நிவாரண நிதியை பெறலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. 


நாளை நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன்களை பெற்றுள்ளவர்கள் மட்டும் நாளை காலை 8 மணிமுதல் 12 மணி வரை நிவாரண நிதியான 2000 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, திமுக-வின் (DMK) சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் முதல் தவணையாக 2000 ரூபாயை இன்று முதல் வழங்குகிறது. 


ALSO READ: தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி? எதற்கு இல்லை?


இந்த திட்டத்தை 10 ஆம் தெதியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். நியாய விலைக் கடைகளில் நிவாரண நிதியை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. 


ஒரு நியாயவிலை கடையில் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும்?
மக்கள் கூட்டம் அதிகமாவதைத் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நபர்களுக்கே நிவாரண நிதியை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு கடையில் 200 நபர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். அட்டைதாரர்கள் தங்களது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நியாய விலை கடைகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரண நிதியைப் பெற்றுக்கொள்ளலாம். 


எத்தனை பேருக்கு நிவாரண நிதி கிடைக்கும்?
தமிழகத்தில் இந்த கொரோனா நிவாரண நிதி 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு மொத்தமாக 4 ஆயிரத்து 153 கோடியே 33 லட்சம் ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


ALSO READ: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓர் ஆண்டுக்கு நிறுத்தம்: தமிழக அரசு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR