சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பா.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் இல்லம் மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் தற்போது சிபிஐ அதிகாரிகள் 9 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி சென்னை மும்பை, டெல்லி,பஞ்சாப் பல இடங்களிலும் இந்த சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்திக் சிதம்பரம் தற்போது லண்டனிலும், பா சிதம்பரம் தலைநகர் டெல்லியில் இருப்பதாகவும் தகவல்கள் உள்ளது.


மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 17, 2022)


ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் கார்த்தி சிதம்பரம், மீது உள்ள நிலையில் தற்போது "முறைகேடாக சீனாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலமாக 200க்கும் மேற்பட்டவர்கள் பஞ்சாபில் பல்வேறு பணிகளுக்காகமுறையற்ற விசா போன்ற ஆவணங்கள் மூலமாக வரவழைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் இதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தற்போது சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் 8:30 மணிமுதல் தனது சோதனையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீட்டின் வெளி வளாக பகுதிகள் முழுவதையும் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான செல்வம் பெருந்தகை கூறுகையில்...


சிபிஐயின் இந்த அதிரடி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும்.ஏற்கனவே ஐஎன்எக்ஸ் விவகாரம் தொடர்பாக உரிய விளக்கங்களை நீதிமன்றத்திலும் விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியுள்ள நிலையில் சோதனை என்ற பெயரில் மத்திய அரசு தொடர் மிரட்டல் விடுத்து வருவதாக செல்வம் பெருந்தகை குற்றம் சாட்டினார்.


இதற்கிடையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வரும் நிலையில் இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில், என்னுடைய வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்துவார்கள்? அந்த எண்ணிக்கையையே நான் மறந்துவிட்டேன். ரெய்டில் இது ஒரு சாதனையாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார். 


 



 


இந்த நிலையில் இதுகுறித்து சிபிஐ கூறுகையில், சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் இந்த ரெய்டு தொடர்பாக பா.சிதம்பரம் ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில், இன்று காலை சென்னையில் உள்ள எனது இல்லத்திலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரப்பூர்வ இல்லத்திலும் சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குழு எனக்கு ஒரு எஃப்ஐஆர் காப்பியை காட்டியது, அதில் நான் குற்றம் சாட்டப்பட்டவனாக குறிப்பிடப்படவில்லை. இந்த சோதனையில் அவர்கள் எதையும் கைப்பற்றவில்லை என தெரிவித்துள்ளது.


 



 


மேலும் படிக்க | அனைத்து சாத்திரங்களும் தமிழில் வரவேண்டும் -பா.சிதம்பரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR