அனைத்து சாத்திரங்களும் தமிழில் வரவேண்டும் -பா.சிதம்பரம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் பாரதிதாசன் தமிழ் பேரவையின் 23-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Last Updated : Jul 21, 2019, 12:51 PM IST
அனைத்து சாத்திரங்களும் தமிழில் வரவேண்டும் -பா.சிதம்பரம்! title=

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் பாரதிதாசன் தமிழ் பேரவையின் 23-வது ஆண்டு விழா நடைபெற்றது.

அதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் என்ற நூலை கலி பூங்குன்றன் வெளியிட முதல் பிரதியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், பாரதிதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டி, செந்தமிழ் செழுந்தமிழாக உருவெடுக்க வேண்டுமெனில், அனைத்து சாத்திரங்களும் தமிழில் வரவேண்டும் என தெரிவித்தார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியில் விளக்கிச் சொல்லவேண்டும் என்றும், 3000 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எப்படி தமிழ் மொழி இருப்பது போல், எதிர்காலத்திலும் தமிழ் மொழி நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய எதிர்ப்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்., தமிழ் எழுத்தாளர் மறைந்த தி. பெரியார் சாக்ரடீசு நினைவாக விருதுகள் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரதிதாசன் தமிழ் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறப்புறையாற்றினார். விழாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துக்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் பேரவை அமைப்பாளர் தி. என்னாரெசு பிராட்லா மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Trending News