Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 17, 2022)

Tamil Nadu Top News Today: தமிழ்நாட்டில் 17.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 17, 2022, 05:44 PM IST
Live Blog

 

17 May, 2022

  • 18:30 PM

    கரூரில், வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டித்து SDPI  கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • 18:00 PM

    எல்லா ஏரிகளையும் தூர் வாருவதற்கு என "டிரிப்பில் ஆர்" என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • 17:45 PM

    காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனப் பேருந்து  லாரி  மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுனர், 16 பெண்கள் உட்பட 17 பேர் காயம். காயம் பட்டவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. இந்த விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

  • 17:45 PM

    சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2-a தேர்வர்கள் காலை  9 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

  • 13:30 PM

    ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.80 - 90 வரை விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

  • 12:30 PM

    தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

    கோடைகாலத்தில் பொதுவாக மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கோடைகால மின்சார தேவைக்காக ஐந்து பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை இருக்கையில், நிலக்கரியின் கையிருப்பில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 5 பிரிவுகளிலும் முழு மின் உற்பத்தி செய்வது சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு தட்டுப்பாடுகளை சந்தித்து வருகிறது. அனல் மின் நிலையத்தில் மூன்று அல்லது நான்கு பிரிவுகள் மட்டுமே அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது நிலக்கரி இருந்தும் கடந்த 5 நாட்களாக 4 பிரிவுகள் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. இதைத்  தொடர்ந்து மூன்றாவது நாளாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு செயல்முறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

  • 11:45 AM

    கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24 ம் தேதி தொடங்க இருக்கிறது. 

  • 11:45 AM

    கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ தற்போது ரெய்டு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் கூறியதாவது., என்னுடைய வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்துவார்கள்? அந்த எண்ணிக்கையையே நான் மறந்துவிட்டேன். ரெய்டில் இது ஒரு சாதனையாக இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார். 

  • 11:45 AM

    சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபாரண தங்கத்தின் விலை 344 ரூபாய் அதிகரித்துள்ளது.

     

  • 10:45 AM

    இன்று காலை முதல் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தி வருகின்றனர். அதுக்குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னும் எத்தனை  முறைதான் சோதனை  நடத்துவார்கள். இதனை கணக்கில் வைத்துகொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

     

  • 10:00 AM

    நூல் விலை உயா்வைக் கண்டித்து, திங்கள்கிழமை தொடங்கிய ஜவுளி உற்பத்தியாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்

  • 09:15 AM

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.

  • 09:15 AM

    சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  • 08:00 AM

    தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 08:00 AM

    பிற மாநிலங்களிலுள்ள பல்கலைக் கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  • 08:00 AM

    பருத்தி நூல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  • 08:00 AM

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

     

  • 08:00 AM

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் ஒரு வாரம் முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

  • 08:00 AM

    நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

  • 08:00 AM

    நெல்லை கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை மீட்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் உயிரிழந்தனர். 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News