சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி: சாத்தான்குளம் (Sathankulam) தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி (CB-CID) போலீசார் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்த கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் என நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடிரென காவலர் முத்துராஜ் கஸ்டடியில் இருந்து தப்பி தலைமறைவாகி விட்டார் என தகவல்கள் வெளியாது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் பேரூரணி சிறையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், சி.பி.சி.ஐ.டி (CB-CID) தரப்பில், "தலைமறைவான காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவரை பிடிப்போம். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களில் அவர் பிடிபடுவார் எனக்கூறப்பட்டு உள்ளது.
பிற செய்தி | சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு போலீஸ் பாதுகாப்பு
நேற்று சாத்தான்குளம் (Sathankulam) தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் (Sathankulam) அருகே அரிவான்மொழியின் உள்ள பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்.பி. முருகன், "மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாங்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். CB-CID இந்த வழக்கை விசாரித்து வருகிறது மற்றும் குற்றவாளிகள் நீதியின் பார்வைக்கு முன் கொண்டு வரப்படுவார்கள். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் (Sathankulam) வழக்கில் நேரில் கண்ட சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பிற செய்தி | சாத்தான்குளம் கொடூரம்: இதுவரை 4 காவல்துறை அதிகாரிகள் கைது; தொடரும் CBCID விசாரணை
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.