தூத்துக்குடி: சாத்தான்குளம் (Sathankulam) தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி (CBCID) பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சஸ்பெண்டில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள்கள் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்ட பின்னர், 10 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீசார் (CBCID Police) உடனடியாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அதேபோல அது பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.
பிற செய்தி | சாத்தான்குளம் மரணங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரஜினிகாந்த்
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இன்று நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பிற செய்தி | சாத்தான்குளம் விவகாரம் எதிரொலி!! தூத்துக்குடி எஸ்.பி உட்பட பல அதிகரிக்கள் இடமாற்றம்
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
#WATCH Tamil Nadu: Residents of Sathankulam, Thoothukudi burst firecrackers y'day after Sub Inspector Ragu Ganesh, who suspended, was arrested by CB-CID in Tuticorin custodial death case.
Sub Inspector Balakrishnan & constables Muthuraj & Murugan also arrested; 4 arrests so far pic.twitter.com/ygldNXaQh3
— ANI (@ANI) July 2, 2020