இந்தியாவில், இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் அதை கட்டுப்படுத்த இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம் மத்தியப் பிரதேசம், மற்றும் தமிழக முதல்வர்களுடன் பிதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.


தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன் என்ற அளவில் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.


அதனை உடனடியாகப் பரிசீலிப்பதாக பிரதமர் மோடியும் உறுதியளித்திருந்த நிலையில், தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி, உடனடியாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய மக்கள் நல வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும், அது எந்தெந்த வகையில் வழங்கப்படும் என்பது குறித்தும் விவரமாக விளக்கி எழுதப்பட்டுள்ளது.


முன்னதாக நேற்று, தேசிய அளவில் வழங்கப்படும் ஆக்சிஜன் உதவித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு உடனடியாக கூடுதல் ஆக்சிஜனை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.



ALSO READ | மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 26,465 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். இதனுடன் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் இறந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.


ALSO READ | GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்