பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் காய்கறி அங்காடி சேவை தொடரும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லாமல் இருக்க நடமாடும் காய்கறி அங்காடி சேவை சென்னை (Chennai) முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
சென்னை: சென்னை மாநகராட்சி (Chennai Corporation) பகுதியில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லாமல் இருக்க நடமாடும் காய்கறி அங்காடி சேவை சென்னை (Chennai) முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது,
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாகவும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைக் குறைக்கும் நோக்கத்திலும், மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் வந்து கூட்டம் கூடாமல் இருக்க, தெருக்களில் காய்கறிகளை விற்பனை செய்திட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
READ MORE | தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: EPS
READ MORE | திருச்சியில் அதிர்ச்சி!! 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயை பரப்பிய துரையூர் வாலிபர்
இந்த நடவடிக்கை மூலம் ஒருபக்கம் கொரோனா வைரஸ் (COVID-19) கட்டுப்படுத்தலாம், அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
தற்போது ஊரடங்கு (Lockdown) காலம் 31 ஜூலை 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்களை பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்கு அனுமதி பெற்ற தள்ளுவண்டிகள், சிறுவாகனங்கள் மூலம் நேரடியாகச் சென்று விற்பனை செய்வதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இந்த அனுமதி வருகின்ற நாட்களுக்கும் முழுவதுமாகப் பொருந்தும் சென்னை மாநகராட்சி (Chennai Corporation) ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.