கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
சென்னயில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி செலவில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சுமார் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அப்போது அவர், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி கூறுகையில்.... கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகச் சிறப்பான அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இது கட்டப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக இந்த கொரோனா மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
READ | ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு முன் இந்த முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்து மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு இங்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் 750 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையமாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இதில், ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும். இம்மையத்தில் 16 கூறு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியாகிராம், 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 28 வெண்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உருவாகும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை அளித்து வருகிறோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். மைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.