கடந்த சில தசாப்தங்களில் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றால் மனித குலத்திற்கு பல நன்மைகள் நிகழ்ந்துள்ளன. ஒருவருக்கு ஒருவர் எளிதாக தொடர்பு கொள்ள பல சாதனங்களும், பயன்முறைகளும் தினம் தினம் அறிமுகம் ஆகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூகத்துக்கு ஏற்ற கருத்துக்களையும், சிந்தனைகளையும் பரப்பவும், மக்களை ஒன்று சேர்க்கவும், தொழில்நுட்பத்தின் (Technology) ஒரு முக்கிய அம்சமான சமூக வலைத்தளம் பெரும் பங்களிக்கின்றது. இருப்பினும், இவற்றை பயன்படுத்தி தேவை இல்லாதல், பொய்யான, சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை பரப்பும் சிலரும் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.


அந்த வகையில், சமூக வலைத்தளத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.


இது தொடர்பாக சென்னை (Chennai) தொண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. கோபிநாத் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருந்தார். 


ALSO READ: மதுரை AIIMS மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு..!!



இந்த புகாரில் அவர், சென்னையைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர், தன்னுடைய @Bjpkalyaan என்ற ட்விட்டர் கணக்கில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையில் வெறுப்புணர்வை வளர்க்கும் வகையில் பதிவுகளை இடுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நபர், மக்களுக்கு இடையில் மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ச்சியாக பதிவிட்டு வருவதாகவும் கோபிநாத் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் கோபிநாத் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் (Police) வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.       


இது தொடர்பாக நடத்தப்பட்ட புலன் விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், கல்யாணராமன் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்வீட்களை பதிவிட்டுள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தலைமையில், தனிப்படையினர், 55 வயதான கல்யாணராமனை, நேற்று, அதாவது 16-10-21 அன்று இரவு கைது செய்தனர்.


விசாரணைக்குப் பிறகு கல்யாணராமன் இன்று (17-10-21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ: எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் 'அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டு: ஆட்டம் ஆரம்பமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR