சினிமா மோகத்தை தூண்டி பெண்களை ஏமாற்றியவன் கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படமெடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 14, 2021, 07:08 PM IST
  • தமிழ் தன்னை சினிமா டைரக்டர் என்றும் மனைவியை பிரிந்து தான் வாழ்ந்து வருவதாகவும் பலரிடம் கூறியுள்ளார்.
  • சில பெண்களிடம் உங்களது தோழிகளை அழைத்து வாருங்கள் அப்படி வந்தால் உங்களுக்கு நான் கமிஷன் தருகிறேன் என்றும் கூறியும் பல பெண்களின் வாழ்க்கையை ஏமாற்றி உள்ளார்.
சினிமா மோகத்தை தூண்டி பெண்களை ஏமாற்றியவன் கைது!

ராமேஸ்வரம் : சினிமாவில் நடிக்க வைப்பதாக பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து, ஆபாச படமெடுத்து மிரட்டிய போலி டைரக்டர் ராமேசுவரத்தில் கைது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை அருகே ராஜிவ் நகரை சேர்ந்த இமானுவேல் ராஜா(43). தமிழ் தன்னை சினிமா டைரக்டர் என்றும் மனைவியை பிரிந்து தான் வாழ்ந்து வருவதாகவும் பலரிடம் கூறியுள்ளார்.மேலும் தான் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரத்தில் பல ஹோட்டல்களில் அறை எடுத்தும் தங்கியுள்ளார்.

ஷூட்டிங்கிற்கு இடம் தேர்வு செய்ய சென்ற இடத்தில் கார்த்திக் ராஜா என்பவரை சந்தித்த இமானுவேல் தனது படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து தருமாறு கேட்டுள்ளார்.சினிமா மோகத்தால் அவரும் ஓகே சொல்லிவிட அவரது தலையில் மிளகாய் அரைக்க இமானுவேல் ராஜா ரெடியாகிவிட்டார். மேலும் கார்த்திக் ராஜா தனது மனைவியையும் இமானுவேல் இயக்கும் படத்தில் நடிக்க வைக்குமாறு கேட்டுள்ளார்.  அதற்கு இமானுவேல் சரி என்று சொல்லி,தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் நீங்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் அதை நான் படம் முடித்தவுடன் உங்கள் சம்பளத்துடன் சேர்த்து அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவேன் என்றும் கூறினார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் கார்த்திக் ராஜாவும் பணத்தை இமானுவேலிடம் கொடுத்துவிட்டார்.

ALSO READ அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் கொள்ளை!

பின்னர் இமானுவேல் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் வைத்து ஆடிஷன் செய்யவிருப்பதாக கார்த்திக் ராஜாவை அழைத்துள்ளார். அந்த அறையில் இருந்த ஒரு பெண் கார்த்திக் ராஜாவிடம் இம்மானுவேல் பற்றிய உண்மைகளை கூறியுள்ளார்.அதனைக் கேட்டகார்த்திக் அதிர்ந்து போய் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.  அது என்னவென்றால் இமானுவேல் தான் ஒரு சினிமா டைரக்டர் எனவும், பலருக்கு சான்ஸ் கொடுக்கிறேன் என்று கூறியும் பல பெண்களை தனது வலையில் விழவைத்து அவர்களின் வாழ்க்கையை சீரளித்துள்ளார்.மேலும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி நிர்வாணமாக போஸ் கொடுக்கச் சொல்லி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து, பின்னர் அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டி அவர்களிடம் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.

மேலும் சில பெண்களிடம் உங்களது தோழிகளை அழைத்து வாருங்கள் அப்படி வந்தால் உங்களுக்கு நான் கமிஷன் தருகிறேன் என்றும் கூறியும் பல பெண்களின் வாழ்க்கையை இந்த காமகொடூரன் சீரளித்துள்ளான். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துவிட இமானுவேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 12 ATM கார்டுகள்,1 டம்மி துப்பாக்கி, காசோலை புத்தகம்,3 செல்போன்கள் ஒரு ஜோடி கவரிங் தோடு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.  செல்போனை ஆராய்ந்ததில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஏற்கனவே இம்மானுவேல் மீது கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் வாகனம் மற்றும் நகை திருட்டு வழக்குகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; பதற வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News