3 மாதத்தில் புஷ்வானமான ரூ.21 லட்சம் மஹேந்திரா பேட்டரி கார் - உரிமையாளர் குமுறல்
சென்னையில் 21 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புதிய பேட்டரி மகேந்திரா கார் 3 மாதத்தில் 3 முறை நடு ரோட்டில் நின்று விட்டதாக குற்றம்சாட்டிய உரிமையாளர், புகாருக்கு அலட்சியமாக பதிலளித்தால் மன உளைச்சலுக்கி ஆளாகி தர்ணாவில் ஈடுபட்டார்.
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் ராம் ராஜேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர் குரோம்பேட்டையில் உள்ள மகேந்திரா ஷோரூமில் ரூ.21 லட்சம் மதிப்புடைய மகேந்திரா எக்ஸ்.யூ.வி. என்ற பேட்டரி காரை கடந்த 3 மாதத்திற்கு முன்பு வாங்கி உள்ளார். புதிதாக வாங்கப்பட்ட அந்த கார் 3 மாதத்தில் 3 முறை சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே நடுவழியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனத்துக்கு செல்லூர் ராஜூவின் பலே விளக்கம்
இன்று காலை ராம் ராஜேஷ் தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக காரை எடுத்து கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில் மீண்டும் புதிதாக வாங்கப்பட்ட அந்த பேட்டரி நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர், உடனடியாக மகேந்திரா சோரூம் மற்றும் சர்வீஸ் செண்டரில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவருடைய புகாருக்கு உடனடியாக பதில் அளிக்காத நிறுவன ஊழியர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னரே காரை எடுக்க வந்துள்ளனர்.
இதனால் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளான ராம் ராஜேஷ் இன்று குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூமில் சென்று நேரடியாக புகார் அளித்துள்ளார். அப்போதும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ராம் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ஷோரூம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ராம் ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, 3 மாதங்களுக்கு முன்பு ரூ.21 லட்சம் மதிப்புடைய மகேந்திரா எக்ஸ்.யூ.வி. என்ற பேட்டரி காரை வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட அந்த கார் 3 மாதத்தில் 3 முறை சாலையில் செல்லும்போதே நின்றுவிட்டதாகவும், இது குறித்து மகேந்திரா ஷோரூமில் புகார் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்ல என தெரிவித்தார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், மாதம் 33 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ கட்டிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். காரை விற்பனை செய்யும் நோக்கத்தில் பல பொய்களை கூறி மகேந்திரா நிறுவன ஊழிய்கள் காரை விற்பனை செயத்தாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | வியாசர்பாடி மடாலயத்தில் இன்றைய தினமே பணிகள் தொடங்கும் - சேகர்பாபு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ