மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், கழிவு நீர், பாதாள சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமாரிடம் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மாநகராட்சியை மேம்படுத்த சிறப்பு நிதி எதையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம்சாட்டிய அவர், மாமன்னன் படம் பார்க்க தனக்கு நேரமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனம் குறித்து பேசிய செல்லூர் ராஜூ, மக்களை விரைவாக சென்று பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த வாகனத்தை அவர் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்தபிறகு செல்லூர் ராஜூ தொடர்ந்து பேசும்போது, "மாநகராட்சி நிர்வாகம் மிக மிக மெத்தனமாக நடைபெறுகிறது. மாநகராட்சியை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநகராட்சியை குற்றம் சாட்டி எம்.எல்.ஏ, துணை மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்ததில் இருந்தே மாநகராட்சியின் நிலை அனைவருக்கும் தெரியும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி புதிய வாகனம் வாங்கி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வல்லவனுக்கு வல்லவன். அதிமுக வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யும்போது தான் அந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இருக்குமா என தெரிய வரும். தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்படும். கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார்" என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ