சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு ஆதிதிராவிடர் பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியீடு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்தபடியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம் தீட்டி வந்தது. மேலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அடுத்த பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்து நகராட்சி நிர்வாகத்துறை இன்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
ALSO READ | குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!
நகராட்சி வெளியிட்ட அரசாணைப்படி, சென்னை மற்றும் தாம்பரம் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் பட்டியலினத்தை சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. ஆவடி மாநகராட்சியானது பட்டியலின பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, மதுரை ஈரோடு உள்ளிட்ட 9 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
அடுத்ததாக நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் தமிழக அரசு இட ஒதுக்கீடு அளித்துள்ள அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த போவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்தல் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ALSO READ | கோவையில் 21ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR