Miss World Universal 2024 News Tamil : அம்மா - மகள் இணைந்தால் கிச்சனில் சமையல் செய்வார்கள், ஊர் கதை பேசுவார்கள், சீரியல் பார்ப்பார்கள்...  “பொம்பளங்க ஒண்ணு சேர்ந்தா வேற என்ன செய்வாங்க” என பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையைச்  சேர்ந்த தாய், மகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டாலே, பெண்கள் தங்களது அழகை பராமரிக்க மறந்துவிடும் சூழ்நிலையில், தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெறும் இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால் இப்படியொரு சாதனையை இந்திய அளவில் முதல் முறையாக நடந்தேறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சென்னையில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன்..! இறுதிப்போட்டியில் 25 பேர்


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் 9 நாட்கள் இந்த போட்டி நடைபெற்றது. இதில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள் என்ற பட்டத்தையும்,  அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளனர். 


தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறும் சரிஹா, தனது தாய் திருமதி உலக அழகி போட்டிகளில் பங்கேற்பதை பார்த்தே தானும் அழகி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறுகிறார். சரிஹாவின் தாயார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மாடலிங் துறையில் எவ்வித அனுபவமும் இலலாதவர். இருப்பினும், மனநல நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர் என பன்முகத்திறமை கொண்டவர்.  இவர், 2021ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பங்கேற்று,  ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தையும், துணைப்பிரிவில் ‘கிளாமரஸ் அச்சீவர்’என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். 


அதேபோல் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்று "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றார். தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் Ms Spirit of world univers and Ms international world People Choice பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும், அழகுத்துறையில் பெண்கள் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள பிளாரன்ஸ், “பெண்கள் எப்போதும் சாதிக்கப் பிறந்தவர்கள். உங்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக்கொள்ளாமல், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள். ஒருநாள்  நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள்” என்கிறார்.


மேலும் படிக்க | ஆடி அமாவாசை : ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r