கூகுளில் அதிகம் தேடப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்... மிரள வைத்த காரணம்!
Thirumullaivoyal Police Station Google Review Viral: லோகேஸ்வரன் என்ற நபர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு கூகுளில் ரிவ்யூ ஒன்றை எழுதியுள்ளார். அந்த ரிவ்யூ தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
Thirumullaivoyal Police Station Google Review Viral: இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றுக்கும் ரிவ்யூ கொடுப்பது என்பது பொதுவான ஒன்று. உண்மையில் பலரும் பலவற்றுக்காக ரிவ்யூ கொடுத்திருப்போம், ஆனால் இங்கு ஒரு நபர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெயிட்டான ரிவ்யூ ஒன்றை கொடுத்திருக்கிறார். அப்படி என்ன சொல்லி இருக்கிறார் விரிவாக பார்க்கலாம்.
ரிவ்யூ...
இப்போதைய காலகட்டத்தில் தொட்டதுக்கெல்லாம் ரிவ்யூ கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு பொருளை வாங்கினாலோ, ஒரு சேவையை பயன்படுத்தினாலோ , ஒரு இடத்திற்கு சென்றாலோ அது எப்படி இருந்தது நமக்கு பிடித்திருந்ததா! பிடிக்கவில்லையா! என்பதை வெளிப்படையாக ரிவ்யூ மூலமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இங்கு லோகேஸ்வரன் என்ற நபர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு கூகுளில் ரிவ்யூ ஒன்றை எழுதியுள்ளார். அந்த ரிவ்யூ தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில் சம்பந்தப்பட்ட அந்த நபர் தான் இரவில் வண்டி ஓட்டும் போது வண்டிக்கான டாக்குமெண்ட் எதுவும் இல்லாமல் போயிட்டேன்.
'வாழ்க்கையில் ஒருமுறையாவது வரணும்'
அதனால் போலீசார் என்னை லாக்கப்பில் அடைத்து விட்டார்கள், இந்த போலீஸ் ஸ்டேஷன் ரொம்ப கிளீனா இருக்கு. இங்க வேலை பாக்குற காவலர்கள் ரொம்ப கண்ணியமா நடந்துக்கிறாங்க .எனக்கு எந்த விதமான துன்புறுத்தலும் இங்கே நடக்கல . பின்னர் என்னுடைய விவரங்கள் கைரேகை எல்லாம் வாங்கி விட்ட பிறகு என்னை அனுப்பிட்டாங்க குறிப்பா இங்க காவலர்கள் யாரும் லஞ்சம் வாங்கல என்று எழுதி இருந்த அவர் கடைசியாக ஹைலைட்டாக ஒரு விஷயத்தை சொல்லி முடித்துள்ளார்.
வாழ்க்கையில ஒரு முறையாவது இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு அனைவரும் வரணும்னு எழுதி உள்ளார். இந்த ரிவ்யூவை படிக்கும் போது படிக்கும் நமக்கே சிரிப்பு வருது. இவரது இந்த ரிவ்யூவை தொடர்ந்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு ஸ்டார் ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே சென்றது.
கமிஷ்னரின் கமெண்ட்!
இதைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் விஜயகுமார் ஐபிஎஸ் இந்த ரிவ்யூவை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். அதில் உங்களது ஜாலியான ரிவ்யூவுக்கு நன்றி நாங்க உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது மட்டும் இல்ல அப்பப்ப தேவைப்படுற என்டேர்டைன்மெண்டும் கொடுப்போம். உங்களுக்கு காவல்துறை உதவி எப்போது தேவைப்பட்டாலும் அழைக்கவும்னு பதிவிட்டு காவல்துறை உதவி எண்ணையும் பதிவிட்டிருக்கிறார்.
ஒரு சில இடங்களில் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து இருந்தாலும். இதுபோன்ற சில ஜாலியான உரையாடல் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இருக்கும்போது இருவருக்குமான நட்பு உண்மையிலேயே அதிகரிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் எப்போதுமே "காவல்துறை நமக்கு நண்பன் தான்".
மேலும் படிக்க | முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி- அமைச்சர் மா சுப்பிரமணியன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ