மழையைத் தொடர்ந்து ஷாக் கொடுக்கும் காய்கறி விலை: தவிக்கும் சென்னைவாசிகள்
தேவை மற்றும் சப்ளைக்கு இடையில் இடைவெளி இருக்கும் வரை, காய்கறிகளின் விலை உயர்வும் தொடரும்.
சென்னை: சென்னை மாநகரில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மொத்த சந்தையில் ரூ.95 முதல் ரூ.100 வரை விற்பனையான தக்காளி, சில்லரை சந்தையில் ரூ.120க்கு விற்பனையானது. இது தவிர மொத்த சந்தையில் ரூ.65க்கு விற்கப்பட்ட கத்தரிக்காயின் விலை சில்லரை சந்தையில் ரூ.95 ஆக இருந்தது. காய்கறிகளின் விலை உயர்ந்ததால், சில்லரை கடைகளில் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ் சந்திரன், ஊடகங்களிடம் பேசுகையில், காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்துவது கடினம் என்றார். தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்கும் வியாபாரிகள் பலரைக் காணவில்லை.
சந்தைகளில் காய்கறிகள் (Vegetables) வரத்து குறைவாக உள்ளதுதான் இதற்கு காரணம். தேவை மற்றும் சப்ளைக்கு இடையில் இடைவெளி இருக்கும் வரை, காய்கறிகளின் விலை உயர்வும் தொடரும் என்று அவர் விளக்கினார்.
ALSO READ:TN Rain Live Update: கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அனைத்து காய்கறிகளின் விலைகளும் 50 ரூபாய்க்கு மேல் உள்ளன. காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. தள்ளுவண்டிகளில் காய்கறி விற்கும் நபர்கள் வராததால், மக்கள் வேறு வழியின்றி சூப்பர் மார்கெட்டுக்கு செல்ல வெண்டியுள்ளது. இங்கே, விலை அதிகமாக உள்ளது.
கோயம்பேடு மொத்த சந்தையில் வியாபாரம் மந்தமாக இருந்த நிலையில், காய்கறிகள் கெட்டுப்போகும் பொருட்கள் என்பதால் மாலையில் விலை குறையலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியும் உள்ளது. 50-60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட வெங்காயம், விலை குறைந்து, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புதிய வெங்காயம் (Onion) தற்போது கிடைப்பதால், வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மழை (Rain) பெய்யும் வரை காய்கறிகளின் விலையும் உயரும். மழை குறைந்தால், விலையும் தானாக குறையும் என்கிறார்கள் வியாபாரிகள்.
ALSO READ:உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR