சமைப்பதா வேண்டாமா? ஒரு கொத்து கொத்தமல்லி ரூ.100, திகிலூட்டும் தக்காளி, வெங்காயம்!!

முன்பு தக்காளியும் வெங்காயமும் பொது மக்களை அழ வைத்தது. இப்போது பச்சை கொத்தமல்லி பாடாய் படுத்துகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2021, 12:47 PM IST
  • தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொது மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
  • நாடு முழுவதும் காய்கறி விலைகள் விண்ணை எட்டியுள்ளன.
  • மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் பணவீக்கத்தின் தாக்கம் உள்ளது.
சமைப்பதா வேண்டாமா? ஒரு கொத்து கொத்தமல்லி ரூ.100, திகிலூட்டும் தக்காளி, வெங்காயம்!!

புதுடெல்லி: பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பொது மக்களை வெகுவாக பாதித்துள்ளது. நாடு முழுவதும் காய்கறி விலைகள் விண்ணை எட்டியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல சந்தைகளில் காய்கறி விலை மக்களின் வாங்கும் திறனைத் தாண்டி சென்றுள்ளது. தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வைத் தொடர்ந்து இப்போது அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தில் உள்ளது.

விண்ணை முட்டும் காய்கறி விலைகள் !

முன்பு தக்காளி மற்றும் வெங்காயம் பொது மக்களை அழ வைத்தது. இப்போது பச்சை கொத்தமல்லி பாடாய் படுத்துகிறது. இதன் விலை முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. ஒரு கொத்து கொத்தமல்லி ரூ .100 க்கு விற்கப்படுகிறது. பொதுவாக ஒரு கொத்து கொத்தமல்லி ரூ.10 அல்லது ரூ.20-க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் தக்காளியின் (Tomato) விலை ரூ. 93 ஐ எட்டியுள்ளது. திங்கள்கிழமை சென்னையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 60 க்கும், டெல்லியில் ஒரு கிலோ ரூ. 59 க்கும், மும்பையில் ரூ. 53 க்கும் விற்கப்பட்டது.

இந்த நகரங்களில் காய்கறி விலை உயர்ந்தது

நாட்டின் 175 நகரங்களில் நுகர்வோர் அமைச்சகம் மேற்கொண்ட கண்காணிப்பின் படி, தக்காளி தற்போது ரூ.50 க்கும் மேல் விற்கப்படுகிறது. மொத்த சந்தைகளிலும் தக்காளியின் விலை மிக அதிகமாக உள்ளது. தக்காளி விலை கொல்கத்தாவில் ரூ.84, சென்னையில் ரூ.52, மும்பையில் ரூ.30 மற்றும் டெல்லியில் ரூ.29.50 என உள்ளது. நிலைமை இப்படியே இருந்தால், விரைவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை நூறு ரூபாயைத் தாண்டி விடும்.

ALSO READ: பண்டிகை காலத்தில் இனிப்பான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைந்தது

பணவீக்கத்தின் விகிதம் ஒருபுறம் குறைந்தாலும், மறுபுறம் காய்கறிகளின் சில்லறை விலை அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் சப்ளை மீதான விளைவுதான் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. தக்காளி மற்றும் வெங்காயம் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பல மாநிலங்களுக்குய் வழங்கப்படுகிறது. ஆனால் அதிக மழை காரணமாக காய்கறிகள் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இது தவிர டீசல் விலை உயர்வாலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

மொத்த மற்றும் சில்லறை விலைகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளி மற்றும் வெங்காயம் தவிர மற்ற காய்கறிகளின் (Vegetables) விலையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நிலைமை மேம்படவில்லை என்றால், காய்கறிகளின் விலையில் குறைவு இருக்காது.

சந்தைகளின் நிலை மோசமாக உள்ளது

மொத்த மற்றும் சில்லறை சந்தைகளில் பணவீக்கத்தின் தாக்கம் உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் காய்கறிகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது, விலை அதிகரித்துள்ளது. ஆனால் சந்தைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் சந்தையில் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டு வருகிறது.

விலைகள் ஏன் அதிகரிக்கின்றன?

தக்காளி மற்றும் வெங்காயத்தின் (Onion) விலை கிலோவுக்கு ரூ .100 வரை அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தெற்கு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காய்கறிகள் சேதமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். எரிபொருள் விலை உயர்வும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பால், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதன் விளைவு மொத்த மற்றும் சில்லறை விலைகளில் தெரிகிறது.

ALSO READ: அக்டோபரில் அதிர்ச்சி: CNG, PNG விலைகள், விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News