தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் கான இறுதி போட்டி கலந்து கொண்ட  சென்னையை சேர்ந்த தடகள வீரர் எட்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்து பிரப்பன்வலசை வடக்கு பாக்ஜலசந்தி கடற்கரையில்  சர்ஃபிங்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் சர்ஃபிங், ஸ்டாண்ட்-அப் பேட்லிங் விளையாட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட பாக்பே தேசிய ஸ்டாண்ட்-அப் பேட்லிங் சாம்பியன்ஷிப் 2022 போட்டிகள் நேற்று தொடங்கி இன்று இறுதி போட்டிகள் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி!


இந்த விளையாட்டு போட்டியினை இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு தலைவர், ஐஎன்எஸ் கடற்படை தளத்தின் கமெண்டர், இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமெண்டர், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விளையாட்டு கொடியை ஏற்றி துவக்கி வைத்தனர். தேசிய அளவில் நடைபெறும் இந்த நீர் விளையாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, ஒரிசா,கல்கத்தா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த 57 தடகள வீரர்கள் இறுதி போட்டிகளில் கலந்து கொண்டனர். பாக்ஜலசந்தி கடலில் ஸ்பிரின்ட், தொழில்நுட்ப பந்தயம், டிஸ்டன்ஸ் என்கின்ற  மூன்று பிரிவுகளின் கீழ் நீர் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற்று வெற்றி பெறும் தடகள வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச நீர் விளையாட்டு போட்டியில் பங்கு பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 



நேற்று நடைபெற்ற தொழில்நுட்ப பந்தயத்தின் இறுதி போட்டியில் இருவர் வெற்றி பெற்று தேசிய சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற 12 கிலோமீட்டர் தூரம் டிஸ்டன்ஸ் இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த சேகர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த மோனிகா வெற்றி பெற்று  தேசிய சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அதேபோல்  200 மீட்டர்தூரம் ஸ்பிரின்ட் போட்டியில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த சேகர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட புனேவை சேர்ந்த காயத்ரி ஆகிய இருவரும் வெற்றி பெற்று  தேசிய சாம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தின் நிலைய கமெண்டர் கேப்டன் விக்ராந்த் சபனீஸ் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  தேசிய அளவில் நடைபெறும் ஸ்டாண்ட்-அப் பேடல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த சேகர் தொடர்ந்து எட்டாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் கான இறுதி போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டுகின்றன - வெளிநாட்டு பெண் புகார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR