ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டுகின்றன - வெளிநாட்டு பெண் புகார்

ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டுவதாக வெளிநாட்டு பெண் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 29, 2022, 07:04 PM IST
  • வெளிநாட்டு பெண்ணை மிரட்டும் ரியல் எஸ்டேட் கும்பல்
  • நீலகிரியில் வெளிநாட்டு பெண் புகார்
  • எஸ்பி அலுவலகத்தில் வெளிநாட்டு பெண் அளித்த புகார்
ரியல் எஸ்டேட் கும்பல் மிரட்டுகின்றன - வெளிநாட்டு பெண் புகார் title=

உதகை அருகே, மாவனல்லாவில் வசித்து வருபவர் பார்பரா எலிசபெத் வில்லிஸ். பிரிட்டனை பூர்விகமாக கொண்ட இவருக்கு நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் இரண்டு வீடுகள் உள்ளன. இந்தச் சூழலில்  மாவட்ட எஸ்பியிடம்  புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அதில்,“ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த மார்க்கஸ் வாயிலாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டொனால்ட் அலென் பார்கலே என்பவர் அறிமுகமானார். அவர் எனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் பணத்தை எடுத்ததுடன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம், பிளாட்டினம் நகைகளையும் பெற்றுக்கொண்டார். 

மேலும் படிக்க | சித்ரா மரணத்துக்கு பின் மாஃபியா... ஹேம்நாத்தின் குற்றச்சாட்டு உண்மையா? தப்பிப்பதற்கான வழியா?

மேலும் எனது கணவர் என கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதேபோல் மார்க்கஸ் மசினகுடியில் பழங்குடியினருக்கு 100 வீடுகள் கட்டி தருவதாக கூறி என் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

மார்க்கஸ் மற்றும் டொனால்ட் அலென் பார்கலே ஆகிய இருவரும் சேர்ந்து, எனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தையும், வீட்டையும் அபகரிக்க திட்டமிட்டு சென்னையில் ரியல் எஸ்டேட் கும்பலை அழைத்து வந்து மிரட்டினர். உள்ளூர் போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை”  என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலன் மனைவிக்கு கத்திக்குத்து: காதல் கணவர் ராகேஷ் வெறிச்செயல்

இதுகுறித்து நீலகிரி எஸ்.பி., ஆசிஷ்ராவத் கூறுகையில், “இந்தப் புகார் குறித்து, டிஜிபி அலுவலகத்தில் இருந்து தகவல் வந்துள்ளது. விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News