இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டுக் கறிக்கு தடை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டால் கொலை குற்றம் செய்த அளவிற்கு பெரிய அளவில் தண்டனையும்  வழங்கப்பட்டு வருகிறது. அங்கு மாடுகளுக்கு ஸ்வெட்டர் தைத்துக் கொடுக்கும் அளவிற்கு தான் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.  இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது உலகறிந்த ஒன்று.  ஆனால் தற்போது நடக்கும் அரசியல் சூழ்நிலைகள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இல்லை என்று உறுதிப்படுத்துகிறது.  சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் நடந்ததை அடுத்து தற்போது பீப் என்னும் மாட்டுக்கறி பிரச்சனை ஏற்படுமோ என்ற நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தவறான அறுவை சிகிச்சைக்கான இழப்பீடு வழக்கு; உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு


உத்திரபிரதேசம் மற்றும் மற்ற ஒரு சில வட மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டது போல் தமிழகத்திலும் தடை விதிக்கப்படுமா என்ற எண்ணம் சென்னை போலீசாரின் செயலால் தற்போது எழுந்துள்ளது.  நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபூபக்கர் தான் சாப்பிட்ட மாட்டுக்கறியை புகைப்படம் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  யாரையும் டேக் கூட செய்யாமல் வெறும் புகைப்படத்தை மட்டுமே பகிர்ந்து உள்ளார்.  இந்த பதிவிற்கு தானாக முன்வந்து சென்னை காவல்துறை "இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது, தேவையற்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும்" என்று பதில் அளித்துள்ளது.



போலீசாரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.  உணவு, உடை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம், இதில் காவல்துறை எவ்வாறு தலையிடலாம் என்று கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.  இதற்கு சென்னை மாநில காவல்துறை விளக்கம் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே.  தற்போது தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.  சமூக நீதி பேசும் கட்சி என்று தன்னை முன்னிறுத்தி கொள்ளும் திமுகவின் ஆட்சியிலேயே மாட்டுக்கறிக்கு தடையா என்று சந்தேகம் எழும்புகிறது.  திமுக ஆட்சி பொறுப்பில் ஏற்றதில் இருந்து பல லாக் அப் மரணங்கள் ஏற்பட்டு வருகிறது.  ஏற்கனவே போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருந்து வரும் நிலையில் சென்னை காவல் துறையின் இந்த பதிவு கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


மேலும் படிக்க | மாஜி அமைச்சரின் பெண் வீக்னஸ் : சிக்க வைக்க திட்டம் போடும் ஓபிஎஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR