Chennai Drug Injection Death: தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் புழக்கம் அதிகமாகி இருப்பதை பல்வேறு குற்றச் சம்பவங்களின் பின்னணியை பார்க்கும் போது தெரியவருகிறது. குறிப்பாக, திமுக காலத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் பின்னணியை கொண்ட ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஜாபர் சாதிக் திமுக நிர்வாகி என்பதால் எதிர்க்கட்சிகள் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருக்கிறது என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. ஜாபர் சாதிக் கைதான உடனேயே திமுக அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியது. 


தொடரும் சம்பவங்கள்


மேலும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து திமுக மறுத்த வருகிறது. ஜாபர் சாதிக் கட்சிக்கு நிதியளிக்கவில்லை என தொடர்ந்து விளக்கம் அளித்தும் வருகிறது. போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும், கஞ்சா விநியோகம் உள்ளிட்டவற்றை தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், போதைப் பொருள் சார்ந்த குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. 


மேலும் படிக்க | திமுக ஆட்சியில் அனைத்திலும் குறைபாடு உள்ளது: பட்டியலிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி


சமீபத்தில், கும்பகோணத்தில் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நபர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்களையும், செய்தியாளர்களையும் தாக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல், சென்னை கண்ணகி நகரில் காவலர்களை கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படும் நபர்கள் தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த இரு சம்பவங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். 


இன்று உயிரிழப்பு


அந்த வகையில், இன்று தமிழக தலைநகரில் போதை ஊசி பயன்படுத்தி ஒரு இளைஞர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா மணி என்கிற தீன தயாளன் (வயது 26). இவர் போதை ஊசிக்கு அடிமையாகி தனக்குத்தானே ஊசி செலுத்தும் பழக்கம் கொண்டுள்ளார். இந்த நிலையில்,  நேற்று இரவு அவருடன் சேர்ந்து போதை ஊசி செலுத்திக் கொண்ட சஞ்சய், பிரபு ஆகியோர் கஞ்சா மணியுடன் சேர்ந்து போதை ஊசியை பயன்படுத்தி வந்துள்ளனர்.


அப்போது, மயக்கம் அடைந்த கஞ்சா மணியை புளியந்தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபும், சஞ்சயும் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த கஞ்சா மணி மயக்கம் தெரியாத காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவருடைய உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து அரசு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கஞ்சா மணி உயிரிழந்துள்ளார்.


ஏற்கனவே இதே போன்று தான் கஞ்சா ஊசி பயன்படுத்தி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து இன்று போதை ஊசி பயன்படுத்தி மணி என்கிற தீனதயாளன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை - ஜெயக்குமார் பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ