மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த ரவுடியை வெட்டிய பழக்கடைக்காரர்
சென்னை அடுத்த திருவிக நகரில் மாமூல் கேட்டு கடைமுன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரவுடியை கடை உரிமையாளர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகர் கே.சி கார்டன் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். 34 வயதான இவர் கே.சி கார்டன் முதல் தெருவில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்கின்ற உள்ள குள்ளாபாய் சிவசுப்பிரமணியனின் காய்கறி கடைக்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த சிவசுப்பிரமணியனின் தம்பி உத்திரபாண்டி செளந்தரை எதிர்த்து பேசியிருக்கிறார். அடிக்கடி மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுவந்ததை தட்டி கேட்டிருக்கிறார். இதில் சிவசுப்பிரமணியனுக்கும், செளந்தருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லைமீறி போக அதில் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சத்தம் போட்டுக்கொண்டிருந்த சௌந்தரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சௌந்தருக்கு தலை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயம் விழுந்தது. அப்போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் திருவிக நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் படிக்க | நெல்லை : அரசுப் பள்ளி மாணவர் பலி - 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த செளந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சிவசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR