சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.
சென்னை: இந்தியா மற்றும் உலக நாடுகளை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கொரோனா இரண்டாம் அலை மெல்ல குறைந்து வருகிறது. ஒரு நாள் தொற்று எண்ணிக்கை அனைத்து இடங்களிலும் சரிவைக் கண்டு வருகிறது.
எனினும், இந்த நேரத்தில் மக்களின் அஜாக்கிரதை அதிகரிப்பதும், எச்சரிக்கை உணர்வு குறைவதும் வருத்தம் அளிக்கின்றது.
உலகம் முழுவதும் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் வழக்கமான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். எனினும், கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.
தமிழகம் (Tamil Nadu) முழுவதும் கடந்த 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனே தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது . தமிழகம் முழுவதும் இதுவரை 30கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ALSO READ: கொரோனா 3வது அலைக்கு இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது?
இந்நிலையில் சென்னை (Chennai) ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரனோ அறிகுறிகளான உடல் சோர்வு ஏற்பட்ட நிலையில் மாணவருக்கு மேற்கொண்ட கொரனோ பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மாணவனின் தந்தை அண்மையில் பெங்களூரு சென்று வந்த நிலையில் தந்தையின் வாயிலாக நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி பள்ளியில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நேரில் ஆய்வு செய்தார். தொற்று ஏற்பட்ட மாணவனின் தொடர்பில் இருந்தவர்கள், ஆசிரியர்கள் என 103 பேருக்கு மாநகராட்சி சார்பில் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய துணை ஆணையர் மனிஷ், இதன் காரணமாக தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் மாநகராட்சியின் சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவர் இப்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸின் (Coronavirus) மூன்றாவது அலை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தாக்கக் கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா தனது மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 15,000 டன்னாக உயர்த்த உத்தேசித்துள்ளது என்று ஆக்ஸிஜன் உற்பத்தி துறையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அதிகபட்ச ஒரு நாள் தேவை அளவான 10,000 டன்கள் என்ற அளவில் இருந்து, 50 சதவிகிதம் கூடுதலாக இரு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: நிபா வைரஸால் இறந்த சிறுவன்! ரம்புட்டான் பழம் சாப்பிட்டது தான் காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR