திருச்சி: வக்ஃப் வாரியத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கணக்கு மதிப்பிலான சொத்துக்கள் தமிழ்நாடு வக்ஃப் வாஇயத்திற்கு சொந்தமாக உள்ளன. அவற்றில் பல சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, பல சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள மற்றும் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தின் மீட்கும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளதாக தமிழகத்தின் வக்பு வாரியத்தின் தலைவர் எம்.அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை துணைத் தலைவரும் ஆவார்.
நேற்று (ஆகஸ்ட் 29,2021) திருச்சியில் வக்ஃப் வாரியத்தின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல விஷயங்களைத் தெரிவித்தார்.
அதன்படி, தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் சொத்துக்களின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாயாகும். அதுமட்டுமல்ல, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ள பல சொத்துக்களும், விற்பனை செய்யப்பட்ட சொத்துக்களையும் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்கும் பணியை வக்ஃப் வாரியம் தொடங்கியுள்ளது. முறைகேடாக ஆக்ரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்டு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அத்துமீறல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித பாரபட்சமும் பார்க்காமல் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் தயக்கம் காட்ட வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எனவே, ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பண பலம் ஆகியவற்றை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்று வக்ஃப் வாரியத்தின் தமிழ்நாடு தலைவர் தெரிவித்தார்.
வாரியத்தின் சொத்துகளைப் பராமரிக்கும் பணியில் மதரசாக்கள், தர்காக்கள் உள்ளிட்ட நிர்வாகங்களுக்கு இடையில் பனிப்போர் நிலவுவதால், அந்த நிர்வாக முறைகளைச் சீரமைத்து, முறைப்படுத்தும் நடவடிக்கைகளை வக்பு வாரியம் சட்டரீதியாக மேற்கொண்டு வருகிறது என்பதையும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர் எம்.அப்துல் ரகுமான் தெரிவித்தார்
முறைகேடுகளில் ஈடுபட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை. ஆனால், இனிமேல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபட்ட மூத்த கண்காணிப்பாளர் 2 நாட்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் அப்துல் ரகுமான் சுட்டிக்காட்டினார்.
READ ALSO | தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி போராட்டம்
வக்பு வாரிய பணியிடங்களை பூர்த்தி செய்வது பற்றி பேசிய வக்ஃப் வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான், இனிமேல் வெளிப்படைத்தன்மையுடன் ஆள்சேர்க்கை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். தற்போது, வாரியத்தில் புதிதாக 27 இளநிலை அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய அரசுத் துறைகளின் வாயிலாக போட்டித் தேர்வு மூலம் ஆட்சேர்க்கை நடைபெறும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக வக்பு வாரியத் தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்கள் மில்லத் எம்.பி.முகம்மது இஸ்மாயில், காயல் மகபூப், திருச்சி மாவட்ட நிர்வாகி அப்துல் முத்தலிப், தென் சென்னை மாவட்டச் செயலாளர் மடுவை எஸ்.பீர்முகம்மது, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை ஜெ.நிஜாமுதீன் என பலர் கலந்துக் கொண்டனர்.
READ ALSO | மதுரை மேம்பால விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR